Home> Sports
Advertisement

சாக்‌ஷி மாலிக், சிந்துவுக்கு பத்மவிருது: மத்திய அரசு ஒப்புதல்

பாட்மிண்டன் வீராங்கனை சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

சாக்‌ஷி மாலிக், சிந்துவுக்கு பத்மவிருது: மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: பாட்மிண்டன் வீராங்கனை சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

ஒவ்வொரு ஆண்டும் சாதனை புரிந்தவர்களுக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவப்படுத்தி வருகிறது. 

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோரின் பட்டியலை மத்திய அரசு தயாரித்து வருகிறது. அதில் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் அவரது பயற்சியாளர் புல்லேலா கோபிசந்த், மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் ஆகியோரின் பெயர்கள் பத்ம விருதுகளுக்கு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

இந்நிலையில் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனினும், அவர்களுக்கு எந்த வகையான பத்ம விருதுகள் வழங்கப்படும் என்ற தகவல் இல்லை. குடியரசு தினத்தன்று அவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Read More