Home> Sports
Advertisement

IND vs NZ: தோனி ஊரில் தோனியாகவே மாறிய இளம் வீரர் - அசரவைக்கும் வீடியோ

India vs New Zealand: இந்தியா நியூசிலாந்து முதல் டி20 போட்டி, தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்ற நிலையில், போட்டியில் தோனியை நியாபகப்படுத்தும் ஒரு சம்பவமும் நடந்தது. 

IND vs NZ: தோனி ஊரில் தோனியாகவே மாறிய இளம் வீரர் - அசரவைக்கும் வீடியோ

India vs New Zealand: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்ற நிலையில், அதில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 176 ரன்களை எடுத்த நிலையில், இந்திய அணியால் 155 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதிக்கட்டத்தில் தனியொருவனாக வாஷிங்டன் சுந்தர் போராடியும் அவருக்கு துணையாக வேறு யாரும் ரன் குவிக்காததால் போட்டி கைநழுவிவிட்டது. 

வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களையும் எடுத்திருந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் சான்ட்னர், பிரேஸ்வெல், பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முன்னதாக, நியூசிலாந்து அணி டைரில் மிட்செல் 59 ரன்களையும், டேவான் கான்வே 52 ரன்களையும் குவித்தனர். இந்திய பந்துவீச்சாளர்களில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை எடுத்தார். 

பந்துவீச்சின் போது, போட்டி கையில் இருந்தும், தேவையில்லாமல் 20-25 ரன்களை அதிகம் கொடுத்தது பேட்டிங்கின்போது பின்னடைவை ஏற்படுத்திவிட்டதாக தோல்விக்கு பின் செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியிருந்தார். பந்து சுழலுக்கு சாதகமாக இருக்கும்போது, தீபக் ஹூடாவிற்கு முழுமையாக 4 ஓவர்களை கொடுத்திருக்கலாம் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க |  IND vs NZ: இப்படி செய்யலாமா ஹர்திக்? பறிபோன இளம் வீரரின் கனவு!

குறிப்பாக, இந்த போட்டி தோனியின் சொந்த மண்ணில் நடந்திருந்த நிலையில், தோனியும், அவரது மனைவி சாக்ஷியும் போட்டியைக் காண மைதானத்திற்கு வந்திருந்தனர்.  தோனியின் சொந்த ஊரில் இந்தியா தோற்றது ஏமாற்றதை அளித்தாலும், அதே நேரத்தில், போட்டியில் தோனியை நியாபகப்படுத்தும் ஒரு சம்பவமும் நடந்தது. 

இந்திய பந்துவீச்சின் 18ஆவது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரின் 5ஆவது பந்தை எதிர்கொண்ட மிட்செல், லேசாக கீப்பருக்கு தட்டி ரன் ஓடினார். பந்தை வேகமாக எடுத்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷனின் அற்புத த்ரோவால், நேராக ஸ்டம்பை தாக்கி பிரேஸ்வெல்லின் விக்கெட்டை இந்தியா கைப்பற்றியது. 

அவரின் த்ரோ பார்ப்போர் அனைவரையும் தோனி குறித்து சிந்திக்க செய்தது. இந்திய அணி மட்டுமின்றி சர்வதேச அளவில் சிறந்த விக்கெட் கீப்பரான தோனியின் இடத்தை முழுமையாக இன்னும் யாராலும் நிரப்ப முடியவில்லை. இருப்பினும், இஷானின் அந்த த்ரோ, ஒரு நொடி தோனியை கண்ணில் காட்டிவிட்டுச்சென்றது. 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.  

மேலும் படிக்க |  மும்பை பிளாட் முதல் BMW கார் வரை; ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு குவிந்த ஆடம்பர பரிசு பொருட்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More