Home> Sports
Advertisement

பீல்டரை மாற்றினால் 5 ரன்கள்! கிரிக்கெட்டில் புதிய விதிகளை கொண்டுவந்துள்ள MCC!

MCC அமைப்பானது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உள்ள சில விதிகளில் அக்டோபர் 1ம் தேதி முதல் மாற்றங்களை கொண்டு வருகிறது.  

பீல்டரை மாற்றினால் 5 ரன்கள்! கிரிக்கெட்டில் புதிய விதிகளை கொண்டுவந்துள்ள MCC!

Marylebone Cricket Club (MCC) என்பது 1787 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு கிரிக்கெட் கிளப் ஆகும், மேலும் 1814 ஆம் ஆண்டு முதல் லண்டனில் உள்ள செயின்ட் ஜான்ஸ் வூட்டில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த கிளப் முன்பு கிரிக்கெட்டின் நிர்வாகக் குழுவாக இருந்தது மற்றும் இன்றும் உலகளாவிய செல்வாக்கைக் கொண்டுள்ளது.  தற்போது 2022ம் ஆண்டுக்கான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க | ஜடேஜா முதலிடம்! உலகின் நெம்பர் 1 ஆல்-ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா!

1.உமிழ்நீரை(எச்சில்) பயன்படுத்த தடை:

பந்துகளில் உமிழ்நீரை(எச்சில்) பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது.

fallbacks

2.கிரீஸில் புதிய பிளேயர்

கேட்ச் முறையில் பேட்ஸ்மேன் அவுட் ஆகும் போது பேட்ஸ்மேன் கிராஸ் ஆனாலும் புதிதாக வரும் பேட்ஸ்மேன் தான் அடுத்துவரும் பந்தினை தொடர வேண்டும்.  ஒருவேளை ஓவரின் இறுதி பந்தில் கேட்ச் ஆனால் மட்டும் விதிவிலக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3. WIDE - கொடுப்பது தொடர்பாக புதிய விதி:

தற்போதைய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள்  பவுலர்களை குழப்பவோ, எதிர்பாராத இடத்தில் ரன்களை எடுக்க முயற்சி செய்யும் போது நகர்ந்து ஆடும் பொழுது பவுலர்கள் WIDE வீசும் போது அதனை WIDE -என நடுவர்கள் அறிவித்து வந்தனர்.  ஆனால் இனி ஸ்ட்ரைக்கர், பந்துவீச்சாளர் பந்துவீச வரும் போது ஸ்ட்ரைக்கர் கிரீசுக்குள் நகர்ந்து இருந்தால் அந்த இடத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு WIDE-ஆக இருந்தால் அதிலிருந்து WIDE- என்று அறிவிக்கப்படும் 

4."MANKAD" முறையில் அவுட்:

பந்துவீச்சிற்கு முன்னதாக நான் ஸ்டைரைக்கர் திசையில் உள்ள பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியேறும் போது "MANKAD" முறையில் அவுட் செய்தால் அது ”ரன் அவுட்”-ஆக கருதப்படும்.  

fallbacks

5. டெட் பால்

மைதானத்திற்குள் நபர், விலங்கு அல்லது பிற பொருளால் விளையாட்டிற்கு தடங்கல் ஏற்பட்டால் இனி டெட் பால் என்று அறிவிக்கப்படும்.  

6. ஃபீல்டிங்கில் மாற்றம் செய்தால் எக்ஸ்ட்ரா ரன்

ஃபீல்டிங் தரப்பில் பந்து வீசும் போது மாற்றம் செய்தால் 'டெட் பால்' என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த நடவடிக்கை வேண்டுமென்றே செய்யப்பட்டதாக இருப்பதால், இனி பேட்டிங் செய்யும் அணிக்கு 5 பெனால்டி ரன்கள் வழங்கப்படும்.

மேலும் படிக்க | ஓய்வுபெற்றார் ஸ்ரீசாந்த்: ‘கனத்த இதயத்துடன் ஓய்வு பெறுகிறேன்’-ட்விட்டரில் மனம் திறந்தார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More