Home> Sports
Advertisement

INDvsAUS - இந்தியா வெற்றிபெற 174 ரன்கள் இலக்கு!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைப்பெற்று வருகின்றது.

INDvsAUS - இந்தியா வெற்றிபெற 174 ரன்கள் இலக்கு!
LIVE Blog

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைப்பெற்று வருகின்றது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பிரிஸ்பென்னே கப்பா மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் பல சுவாரசிய நிகழ்வுகளை நிகழ்த்த இந்திய வீரர்கள் காத்திருக்கின்றனர்... (முழு விவரம் அறிந்துக்கொள்ள)

21 November 2018
16:45 PM

இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் குவித்துள்ளது.

 

16:15 PM

4.1 - Wicket!

8 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் ஷர்மா பெரன்ட்ரோப் வீசிய பந்தில் வெளியேறினார்!

தற்போதைய நிலவரப்படி இந்தியா 5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு KL ராகுல் 1(1) மற்றும் ஷிகர் தவான் 32(21) ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா வெற்றி பெற 72 பந்துகளில் 133 ரன்கள் குவித்தாகவேண்டும்....

16:00 PM

மழை காரணமாக ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்துள்ளது.

ஆஸி அணி தரப்பில் கெளம் மேக்ஸ்வெல் 46(24), மார்க்கஸ் ஸ்டோனிஸ் ஆட்டமிழக்காமல் 33(19) ரன்கள் குவித்தனர். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை குவித்துள்ளார். 

இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடி வருகின்றது.

15:00 PM

மழையால் ஆட்டம் பாதிப்பு.... ஆட்டத்தின் 16.1-வது பந்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!

தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா அணி 16.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்துள்ளது. கெளன் மேக்ஸ்வெல் 46(23), மார்கஸ் ஸ்டோனிக்ஸ் 31(18) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

14:00 PM

75 ரன்களுக்கு மூன்றாவது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா அணி.

 

14:00 PM

64 ரன்களுக்கு இரண்டாது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா அணி

 

13:45 PM

4.1: WICKET! 

கலீல் அஹமது வீசிய பந்தில் அர்ஸ் சார்ட் 7(12) ரன்களில் வெளியேறினார்!

தற்போதேய நிலவரப்படி ஆஸ்திரேலியா அணி 5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் குவித்துள்ளது. பின்ச் 19(15), கிறிஸ் லெய்ன் 5(3) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

13:30 PM

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடி வருகின்றது!

அணி வீரர்கள் விவரம்...

Read More