Home> Sports
Advertisement

CSK vs RCB Match LIVE : எல்லைச்சாமி தூபே அதிரடி... சிஎஸ்கே வெற்றி - ஆர்சிபிக்கு தொடரும் துரதிருஷ்டம்

CSK vs RCB Match Live Updates in Tamil : 17ஆவது ஐபிஎல் சீசனின் தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. தொடர்ந்து, முதல் போட்டியில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

CSK vs RCB Match LIVE : எல்லைச்சாமி தூபே அதிரடி... சிஎஸ்கே வெற்றி - ஆர்சிபிக்கு தொடரும் துரதிருஷ்டம்
LIVE Blog

CSK vs RCB Match Live Updates in Tamil : இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரம்மாண்டமான தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளை போலவே 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளது. 

உலகின் நம்பர் டி20 லீக்கான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே 5 முறை கோப்பையை வென்ற அணியும், நடப்பு சாம்பியனுமான சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உடன் மோதுகின்றன. தோனி சிஎஸ்கவின் கேப்டன்ஸியில் இருந்து விலகி ருதுராஜ் கெய்க்வாட்டிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்துள்ள நிலையில் இன்றைய போட்டியின் மேல் இருந்து எக்கச்சக்க எதிர்பார்ப்பும் இப்போது இரட்டிப்பாகி உள்ளது. 

அந்த வகையில், ஐபிஎல் தொடரின் தொடக்க விழா மற்றும் தொடக்க போட்டி குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற பக்கத்துடன் இணைந்திருங்கள். 

22 March 2024
23:31 PM

CSK vs RCB Match LIVE : சிஎஸ்கே வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

23:19 PM

CSK vs RCB Match LIVE : 15 ஓவர்கள் முடிவில்...

சிஎஸ்கே - 128/4, தூபே - 7 ரன்கள், ஜேடஜா - 16 ரன்கள் 

கேம்ரூன் கிரீன் - 2 விக்கெட்டுகள்

யாஷ் தயாள், கரன் சர்மா தலா 1 விக்கெட்டுகள் 

23:03 PM

CSK vs RCB Match LIVE : ரஹானே அவுட்

கிரீன் வீசிய 11ஆவது ஓவரில் அஜிங்கயா ரஹானே 27 ரன்களில் அவுட்டானார். சிஎஸ்கே அணியின் Impact Sub ஆக சிவம் தூபே களமிறங்கி உள்ளார். 

22:55 PM

CSK vs RCB Match LIVE : 10 ஓவர்கள் முடிவில்

சிஎஸ்கே அணி 10 ஓவர்களில் 92 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னும் 10 ஓவர்களில் 82 ரன்கள் வெற்றிக்கு தேவையாகும். 

22:37 PM

CSK vs RCB Match LIVE : ரவீந்திராவும் அவுட்

கரன் சர்மா வீசிய 7ஆவது ஓவரின் கடைசி பந்தில் ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்தார். அவர் 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உடன் 37 ரன்களை அடித்திருந்தார். 7 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 71 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது. 

22:10 PM

CSK vs RCB Match LIVE : நடையை கட்டினார் ருதுராஜ் கெய்க்வாட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே 4 ஓவர்களில் 38 ரன்களை எடுத்து 1 விக்கெட்டை இழந்துள்ளது. யாஷ் தயாள் ருதுராஜ் கெய்க்வாட்டை விக்கெட் எடுத்தார். 

22:02 PM

CSK vs RCB Match LIVE : DJ Axwell இசை நிகழ்ச்சி

முதல் இன்னிங்ஸ் நிறைவடைந்த நிலையில், மைதானத்தில் DJ Axwell இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது பார்வையாளர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. 

21:48 PM

CSK vs RCB Match LIVE : முதல் இன்னிங்ஸ் முடிவில்...

ஆர்சிபி - 173/5, அனுஜ் ராவத் - 48 ரன்கள், தினேஷ் கார்த்திக் - 38 ரன்கள்

பந்துவீச்சு

முஸ்தபிசுர் ரஹ்மான் - 4/29

தீபக் சஹார் - 1/37

21:08 PM

CSK vs RCB Highlights: 17ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 173 ரன்களை குவித்தது. 

21:05 PM

CSK vs RCB Match LIVE : 14 ஓவர்கள் ஓவர்கள் முடிவில்

ஆர்சிபி - 90/5, அனுஜ் ராவத் - 8 ரன்கள், தினேஷ் கார்த்திக் - 4 ரன்கள்

பந்துவீச்சு

முஸ்தபிசுர் ரஹ்மான் - 4 விக்கெட்டுகள்

தீபக் சஹார் - 1 விக்கெட்

20:57 PM

CSK vs RCB Match LIVE : விராட் கோலி, கேம்ரூன் கிரீன் அவுட்டான வீடியோ

20:45 PM

CSK vs RCB Match LIVE : மிரட்டும் முஸ்தபிசுர் ரஹ்மான்

12ஆவது ஓவரில் விராட் கோலியை 21 ரன்களிலும், கேம்ரூன் கிரீனை 18 ரன்களிலும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆட்டமிழக்கச் செய்தார்.

20:31 PM

CSK vs RCB Match LIVE : விராட் படைத்த சாதனை

ஆறாவது ஓவரின் 5வது பந்தில் சிங்கிஸ் அடித்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி 12 ஆயிரம் ரன்களை கடந்தார். 12 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர் மற்றும் ஆறாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை பெற்றார். 

ஆர்சிபி - 63/3, விராட் கோலி 11, கேம்ரூன் கிரீன் 14.

முஸ்தபிசுர் ரஹ்மான் - 2 விக்கெட்டுகள்

தீபக் சஹார் - 1 விக்கெட்

20:25 PM

CSK vs RCB Match LIVE : பவர்பிளேவில் 3 விக்கெட்டுகள்

டூ பிளெசிஸை தொடர்ந்து 5ஆவது ஓவரில் ரஜத் பட்டிதார் ஆட்டமிழந்த நிலையில், 6 ஓவரில் மேக்ஸ்வெல் டக் அவுட்டானார். 

20:21 PM

CSK vs RCB Match LIVE : சிஎஸ்கேவுக்கு முதல் விக்கெட்

ஃபாப் டூ பிளெசிஸ் 35 (23) ரன்களில் அவுட்டானார். முஸ்தபிசூர் ரஹ்மான் வீசிய 5ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் அவர் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

20:14 PM

CSK vs RCB Match LIVE : 4 ஓவர்கள் முடிவில்

ஆர்சிபி - 37/0, பாப் டூ பிளேசிஸ் - 31, விராட் கோலி - 3

20:00 PM

CSK vs RCB Match LIVE : டூ பிளெசிஸ் அதிரடி தொடக்கம்

ஆர்சிபி 2 ஓவர்களில் 16 ரன்கள். டூ பிளேசிஸ் - 14 ரன்கள், விராட் கோலி 1 ரன்

 

19:53 PM

CSK vs RCB Match LIVE : Impact வீரர்கள் யார் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, மொயின் அலி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: யாஷ் தயாள், ஆகாஷ், பிரபுதேசாய், ஸ்வப்னில், வைஷாக்

19:42 PM

CSK vs RCB Live: பிளேயிங் லெவன்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, ரஹானே, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, தோனி, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், மகேஷ் தீக்ஷனா, முஸ்தபீஷூர் ரஹ்மான். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாப் டூ பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் பட்டிதார், அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், கேம்ரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அல்ஸாரி ஜோசப், முகமது சிராஜ், கரன் சர்மா, மயங்க் தாங்கர்.

19:36 PM

CSK vs RCB Match LIVE : டாஸ் வென்ற ஆர்சிபி...

ஆர்சிபி கேப்டன் ஃபாப் டூ பிளேசிஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்தவு செய்தார். சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச உள்ளது. 

19:19 PM

CSK vs RCB Match LIVE : டாஸ் தாமதம்

சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியின் டாஸ் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 7.40 மணிக்கு வீசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

19:06 PM

IPL 2024 Opening Ceremony: ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் குழுவினர்

19:03 PM

LIVE: IPL 2024 Opening Ceremony: அக்சய் குமார் & டைகர் செராஃப்

18:56 PM

IPL 2024 Opening Ceremony: 'நீ சிங்கம் தான்...'

ஏ.ஆர். ரஹ்மான் முன்னணியில் பல பாடகர்கள் நிகழ்ச்சியில் பாடினர். இதில் ஏ.ஆர். ரஹ்மானின் மகனும், பாடகருமான ஏ.ஆர். அமீன் சிம்பு நடிப்பில் வெளியான 'பத்து தல' படத்தின் 'அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று' பாடலை பாடியதும், கேமரா ஜடேஜாவை காண்பிக்க மைதானமே கரவொலியில் அதிர்ந்தது.

18:48 PM

LIVE: IPL 2024 Opening Ceremony: வந்தே மாதரம் பாட்டுடன் தொடங்கிய ஏ.ஆர். ரஹ்மான்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாடகர் சோனு நிகம் ஆகியோர் நிகழ்ச்சி மேடையில் பாடினர். இதில் ஏ.ஆர். ரஹ்மான் வந்தே மாதரம் பாடல் பாடி தனது நிகழ்வை தொடங்கினார்.

 

 

18:43 PM

LIVE: IPL 2024 Opening Ceremony: தேசிய கொடியுடன் அக்சய் குமார் என்ட்ரி

ஐபிஎல் தொடக்க விழாவில் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் வானில் இருந்து கையில் தேசிய கோடியுடன் நிகழ்ச்சி மேடைக்கு வந்தார். அவருடன் பாலிவுட் டைகர் செராஃப்பும் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடினர். 

18:42 PM

CSK vs RCB Match Live: சேப்பாக்கத்தில் நேருக்கு நேர்

சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் 8 முறை சென்னை சேப்பாக்கத்தில் மோதி உள்ளன. இதில் சிஎஸ்கே 7 போட்டிகளிலும், ஆர்சிபி 1 போட்டியிலும் வென்றுள்ளது. அதுவும் 2008ஆம் ஆண்டுதான் ஆர்சிபி ராகுல் டிராவிட் தலைமையில் வென்றது. 

18:21 PM

CSK vs RCB Match Live: நேருக்கு நேர்

சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மொத்தம் 31 போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் சிஎஸ்கே 21 போட்டிகளிலும், ஆர்சிபி 10 போட்டிகளிலும் வென்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவில்லை. 

18:10 PM

CSK vs RCB Match LIVE : ருதுராஜ் கெய்க்வாட் vs ஃபாஃப் டூ பிளெசிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, டாஸில் ருதுராஜ் கெய்க்வாட், ஆர்சிபி கேப்டன் பாப் டூ பிளெசிஸ் ஆகியோரை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 

18:07 PM

IPL 2024 Opening Ceremony : டிக்கெட் விவரம்

சென்னை சேப்பாக்கத்தில் தொடக்க போட்டியை காண பார்வையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. ரூ.1700 முதல் ரூ.7500 வரை டிக்கெட் விற்பனை நடைபெற்றது. 

18:05 PM

IPL 2024 Opening Ceremony Live Streaming: நேரலையை எதில் பார்ப்பது?

தொடக்க நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், மொபைல் உள்ளிட்ட சாதனங்களில் ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்திலும் இலவசமாக கண்டுகளிக்கலாம். 

18:03 PM

CSK vs RCB Match LIVE : போட்டி எப்போது தொடங்கும்?

தொடக்க விழா நிறைவு பெற்றதன் சுமார் இரவு 7.30 மணிக்கு போட்டிக்கான டாஸ் தொடங்கப்படும். ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்கப்படும்.

17:56 PM

IPL 2024 Opening Ceremony: தொடக்க விழா எப்போது?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சிகள் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

17:47 PM

IPL 2024 Opening Ceremony: தொடக்க விழா நிகழ்ச்சிகள்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாடகர் சோனு நிகம், பாலிவுட் நடிகர்கள் அக்சய் குமார், டைகர் செஷராஃப் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் தொடக்க விழாவில் இடம்பெற உள்ளன. சிஎஸ்கே - ஆர்சிபி போட்டியின் இடையில் DJ Axwell-இன் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லைட் ஷோ மற்றும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் உள்ளதாக கூறப்படுகிறது.  

Read More