Home> Sports
Advertisement

பாப் டு பிளெசிஸ் நீக்கம்? ஆர்சிபி அணியின் கேப்டனாகும் கேஎல் ராகுல்?

ஐபிஎல் 2025 ஏலத்தில் லக்னோ அணியில் இருந்து கேஎல் ராகுல் வெளியேற்றப்படுவார் என்று செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஆர்சிபி அணியில் இணைய உள்ளார் என்று கூறப்படுகிறது.  

பாப் டு பிளெசிஸ் நீக்கம்? ஆர்சிபி அணியின் கேப்டனாகும் கேஎல் ராகுல்?

வரவிருக்கும் ஐபிஎல் 2025 ஏலத்தில் பல பெரிய மாற்றங்கள் நிகழ உள்ளது. ஒவ்வொரு அணியிலும் உள்ள முக்கியமான வீரர்கள் வேறு சில அணிகளுக்கு மாற உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. ஐபிஎல் 2024 போட்டிகள் முடிந்த சில நாட்களில் இருந்து ஐபிஎல் 2025 ஏலம் தொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, குஜராத், லக்னோ போன்ற அணிகள் ஏலம் தொடர்பாக பல முக்கிய கருத்துக்களை பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ பேச்சு வார்த்தை நடத்தி இருந்தது. ஐபிஎல் 2025 ஏலத்திலும் சில மாற்றங்களை செய்ய உள்ளது பிசிசிஐ.

மேலும் படிக்க | இனி இவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கஷ்டம்தான்... முதல் நாளிலேயே மெகா சொதப்பல்!

லக்னோ அணியில் நீடிப்பாரா கேஎல் ராகுல்?

லக்னோ அணியில் கேஎல் ராகுலின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிற்கும் ராகுலுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் அடுத்த ஆண்டு அவர் லக்னோ அணியுடன் பயணிக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற எல்எஸ்ஜியின் ஜெர்சி வெளியீட்டு விழாவில், சஞ்சீவ் கோயங்காவிடம் கேஎல் ராகுலின் எதிர்காலம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சஞ்சீவ் கோயங்கா கேஎல் ராகுல் எனது குடும்பத்தில் ஒருவர் என்று தெரிவித்து இருந்தார். மேலும் லக்னோ அணியின் புதிய மெண்டாராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டார். 

ஆர்சிபி அணியில் கேஎல் ராகுல்?

லக்னோ அணியில் இருந்து வெளியேறி கேஎல் ராகுல் ஆர்சிபி அணியில் இணைய உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போது கேப்டனாக இருக்கும் பாப் டு பிளெசிஸ்க்கு பதில் அவர் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபி 2024ல் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அப்போது ​​கேஎல் ராகுல் பேட்டிங் செய்ய மைதானத்திற்கு வந்தார். அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் "ஆர்சிபி கேப்டன்" என்று கோஷமிட்டனர். இதன் மூலம் பெங்களூரு ரசிகர்கள் அவரை தற்போதே கேப்டனராக ஏற்றுக்கொண்டனர் என்பது தெரிகிறது.

ஐபிஎல் 2013 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கேஎல் ராகுல் அறிமுகமானார். பிறகு 2014 ஐபிஎல்லில் 1 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அவரை வாங்கியது. பின்னர் 2016 சீசனில் மீண்டும் ஆர்சிபி அணியில் இணைந்தார். 2022 ஆம் ஆண்டு முதல் எல்எஸ்ஜி அணியின் கேப்டனாக இருந்து வருகிறார் கேஎல் ராகுல்.

மேலும் படிக்க | துலீப் டிராபி : சதமடித்த தம்பி, ஆனந்த கண்ணீரோடு குதித்து கொண்டாடிய சர்பிராஸ் கான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More