Home> Sports
Advertisement

ஒரு கேட்சில் மாறிய மேட்ச்! 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி!

சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. 

ஒரு கேட்சில் மாறிய மேட்ச்!  3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி!

ஐபிஎல் 2021ன் 50வது போட்டியான இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின.  ஏற்கனவே நடந்த போட்டியில் சென்னை அணி டெல்லி அணியிடம் தோல்வி அடைந்தது.  இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் களம் இறங்கியது.  

டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பீல்டிங் தேர்வு செய்தார்.  சென்னை அணியில் ரெய்னாவுக்கு பதிலாக முதல் முறையாக உத்தப்பா அணியில் இடம் பெற்றார்.  வெற்றிகரமாக ஓபனிங் பார்ட்னர்ஷிப் என்று கருதிய சென்னை அணியில் ருத்ராஜ் மற்றும் டுப்லஸ்ஸிஸ் சொற்ப ரன்களில் வெளியேறினர்.  சிஎஸ்கே அணிக்காக முதல் முறையாக ஆடிய உத்தப்பா 19 பந்துகளில் 19 ரன்கள் அடுத்து வெளியேற சிஎஸ்கே அணியின் விக்கெட் அடுத்தடுத்து சரிந்தது.  அதன்பின் ஜோடி சேர்ந்த ராயுடு மற்றும் கேப்டன் தோனி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.  இவர்களின் நிதான ஆட்டத்தினால் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் சரிந்தது.  43 பந்துகளில் ராயுடு 55 ரன்கள் அடிக்க சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. 

 

எளிமையான டார்கெட்டை விரட்டிய டெல்லி அணியின் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அதிரடியாக அமைந்தது.  ஷிகார் தவான் 35 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார்.  பவர் பிளே முடியும் வரை ஆதிக்கம் செலுத்திய டெல்லி அணியின் பேட்டிங் அதன்பின் சரிந்தது.  டெல்லி அணியின் பக்கம் இருந்த போட்டி மெல்ல மெல்ல சிஎஸ்கே அணியின் பக்கம் மாறியது.  18-வது ஓவரில் ஹெட்மையர் இன் முக்கியமான கேட்சை கௌதம் தவறவிட போட்டி தலைகீழாக மாறியது.  

6 பந்தில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசிவரை பிராவோ வீசினார்.  20வது ஒரு மூன்றாவது பந்தில் அக்ஷர் பட்டேல் அவுட்டானார்.  3 பந்துகளில் 2 ரன்கள் அடித்தால் வெற்றி நிலையில் ரபாடா பவுண்டரி அடித்து டெல்லி அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.  இதனால் டெல்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மற்றும் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.  

 

ALSO READ டி 20 கேப்டனாக ரோஹித் சர்மாவை விட ரிஷப் பண்ட் சிறந்த தேர்வா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More