Home> Sports
Advertisement

ஐபிஎல்லில் ராகுல் செய்த சாதனை... கெய்லே இவருக்கு பின்னாடிதான்

ஐபிஎல் வரலாற்றில் கே.எல். ராகுல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.  

ஐபிஎல்லில் ராகுல் செய்த சாதனை... கெய்லே இவருக்கு பின்னாடிதான்

ஐபிஎல் 2022ல் எலிமினேட்டர் போட்டியில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி பட்டிதாரின் அட்டகாசமான சதத்தாலும், தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தாலும் 20 ஓவர்கள் முடிவில் 207 ரன்களை குவித்தது.

அதன் பிறகு களமிறங்கிய லக்னோ அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த அணியின் கேப்டன் நேற்று அதிரடியாக ஆடி 79 ரன்களை குவித்தார். இதன் மூலம் அவர் இந்த சீசனில் 15 போட்டிகளில் விளையாடி 616 ரன்களை குவித்தார்.

fallbacks

இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை (4 முறை) 600 ரன்களுக்கும் மேல் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும் படிக்க | லக்னோ தோல்விக்குப் பிறகு காம்பீரின் ரியாக்ஷன் வைரல்

அவர் இதற்கு முன்னதாக 2018ஆம் ஆண்டு 659 ரன்களையும், 2020ஆம் ஆண்டு 670 ரன்களையும், 2021ஆம் ஆண்டு 626 ரன்களையும் எடுத்திருக்கிறார். இவருக்கு அடுத்ததாக க்ரிஸ் கெயில் மூன்று முறை 600 ரன்களுக்கு அதிகமாக அடித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சச்சினின் சாதனைக்கு அச்சுறுத்தலாக இருந்த முன்னாள் வீரருக்கு நேர்ந்த கதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More