Home> Sports
Advertisement

IPL2023: மும்பை அணிக்குள் என்டிரியான அதி வேகபுயல்...! செம குஷியில் ரோகித்

ரோகித் சர்மாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கப்போகும் ஜோப்ரா ஆர்சர் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் முதன்முறையாக மும்பை அணிக்காக விளையாட இருக்கிறார்.  

IPL2023: மும்பை அணிக்குள் என்டிரியான அதி வேகபுயல்...! செம குஷியில் ரோகித்

ஐபிஎல் தொடரின் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ், கடந்த ஐபிஎல் போட்டியில் மோசமான தோல்விகளை சந்தித்து பரிதாபமாக வெளியேறிது. ஆனால், இம்முறை மிகப்பெரிய கம்பேக் கொடுக்கும் முனைப்பில் அந்த அணி இருக்கிறது. பேட்டிங்கில் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருந்த பொல்லார்டு ஓய்வு பெற்றுவிட்டார். ராயுடு சென்னை அணிக்கு சென்றுவிட்டார். பவுலிங்கில் கலக்கிக் கொண்டிருந்த மலிங்கா ஓய்வு பெற்றுவிட, பும்ரா காயத்தில் இருந்து இன்னும் குணமாகவில்லை. இந்த ஸ்டார் வீரர்கள் இல்லாதது கடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது.

மேலும் படிக்க | IPL2023: சிஎஸ்கேவுக்கு வரப்போகும் இங்கிலாந்து புயல்: உற்சாகத்தில் தோனி..!

ஆனால், அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் நட்சத்திர வீரர்களை குறிவைத்து தங்கள் அணிக்கு தட்டி தூக்கியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்சர் மற்றும் ஆஸ்திரேலியாவின் இளம் வீரர் கேம்ரூன் கிரீன், டிம் டேவிட், பெஹண்ட்ராப் ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த ஐபிஎல் போட்டியில் விளையாட இருக்கின்றனர். ஜோப்ரா ஆர்சர் கடந்த ஆண்டே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. தொடர் சிகிச்சைக்குப் பிறகு காயத்தில் இருந்து குணமடைந்த அவர் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் லீக் போட்டியில் மும்பை கேப்டவுன் அணிக்காக களம் கண்டார்.

அந்த தொடருக்குப் பிறகு தீவிர பயிற்சியில் இருந்த ஜோப்ரா ஆர்சர் இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். அவரின் வருகை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பும்ரா இல்லாத இடத்தை ஜோப்ரா ஆர்ச்சர் நிரப்புவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் ஜோப்ரா ஆர்சரை உற்சாகமாக வரவேற்றிருக்கிறது. அவரின் வருகை குறித்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.  

மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கேவின் துருப்புச் சீட்டு இவர் தான்..! மற்ற அணிகளுக்கு கிலி காட்டப்போகிறார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More