Home> Sports
Advertisement

IPL 2023 : மினி ஏலத்தின் விதிகள் முதல் அணிகளின் கையிருப்பு தொகை வரை - முழு விவரம்

 ஐபிஎல் 2023 தொடரை முன்னிடே்டு, இம்மாதம் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெற உள்ள நிலையில், அதுகுறித்த முழு தகவல்களை இதில் காணலாம். 

IPL 2023 : மினி ஏலத்தின் விதிகள் முதல் அணிகளின் கையிருப்பு தொகை வரை - முழு விவரம்

15ஆவது ஐபிஎல் சீசன் அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் பல நகரங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது. வழக்கமாக மூன்று சீசன்களுக்கு ஒருமுறை மெகா ஏலம், ஒவ்வொரு சீசனுக்கு இடையில் மினி ஏலமும் நடைபெறும். 

கடந்த சீசனையொட்டி, மெகா ஏலம் நடத்தப்பட்ட நிலையில், அடுத்த சீசனுக்காக தற்போது மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலம் வரும் டிச. 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற இருக்கிறது. கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

வரும் மினி ஏலத்தில் மொத்தம் 991 பேர் பங்கேற்கின்றனர். அதில், 714 இந்திய வீரர்களும், 277 வெளிநாட்டு வீரர்களும் அடக்கம். முன்னதாக, மினி ஏலத்தை முன்னிட்டு 10இல் இருந்து 16 வீரர்கள் வரை ஐபிஎல் அணிகள் தக்கவைத்தன. தொடர்ந்து, மற்ற வீரர்களை விடுவித்தனர். 

மேலும் படிக்க | என்னது சிஎஸ்கே-வின் அடுத்த கேப்டன் ஜடேஜா இல்லையா? புதிய ட்விஸ்ட்!

தற்போது, ஏலத்தில் ஒவ்வொரு அணியும் மொத்தம் தலா 25 வீரர்களை வைத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 15ஆம் தேதி , வீரர்களை தக்கவைக்கவும், விடுவிக்கவும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அதில், அனைத்து அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்கவைத்தன, 85 வீரர்களை விடுவித்தன. இதையடுத்து, நவம்பர் 30ஆம் தேதிக்குள், ஐபிஎல் ஏலத்திற்கு விண்ணபிக்கவும் கால அவகாசம் வழங்கப்பட்டது.

ஐபிஎல் மினி ஏலம் வரும் டிச. 23ஆம் தேதி நடைபெறுகிறது. கேரளாவின் கொச்சியில் நடைபெறும் இந்த ஏலத்தை, இந்திய தொலைக்காட்சி பார்வையாளர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையாக காணலாம். இந்திய துணைக்கண்டத்தின் ஓடிடி ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை  வியாகாம் 18 நிறுவனம் வைத்துள்ளது. இதனை தொடர்ந்து, ஐபிஎல் ஏலம் ஜியோ சினிமா ஆப்பிலும், வியாகாம் 18 இணையதளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

ஐபிஎல் மினி ஏலத்தின் விதிகள்

  • எந்தவொரு அணியும், தங்கள் தக்கவைத்த வீரர்களில் அதிகப்பட்ச மதிப்பில் உள்ளவரை தாண்டி, இந்த ஏலத்தில் மற்றொரு வீரரை வாங்க கூடாது. உதாரணத்திற்கு, சென்னை அணியின் அதிகபட்ச மதிப்புடையவர் ஜடேஜா (ரூ. 16 கோடி). எனவே, சிஎஸ்கே நிர்வாகம் இந்த ஏலத்தில் ரூ. 16 கோடியை தாண்டி வேறொரு வீரரை வாங்க இயலாது. 
  • ஒவ்வொரு அணியின் மொத்த பட்ஜெட்டில் குறைந்தது 75 சதவீதம் கண்டிப்பாக செலவிடப்பட வேண்டும்.
  • ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) கார்டு விருப்பத்தை அணிகள் தேர்ந்தெடுக்க முடியாது.
  • ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்கள் இருக்க வேண்டும், எந்த அணியிலும் 25 வீரர்களுக்கு மேல் இருக்கக்கூடாது.
  • ஒரு அணியில் குறைந்தபட்சம் 17 மற்றும் அதிகபட்சம் 25 இந்திய வீரர்கள் இருக்கலாம்.
  • வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கையில் உச்ச வரம்பு எதுவும் இல்லை, அதிகபட்சம் 8 வீரர்கள்.

ஐபிஎல் அணிகளின் கையிருப்பில் வைத்துள்ள தொகை

சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ. 20.45 கோடி (9 இடங்கள்) 

டெல்லி கேபிடல்ஸ் - ரூ. 19.45 கோடி (7 இடங்கள்)

குஜராத் டைட்டன்ஸ் - ரூ. 19.25 கோடி (10 இடங்கள்)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ. 7.05 கோடி (14 இடங்கள்)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ. 23.35 கோடி (14 இடங்கள்)

மும்பை இந்தியன்ஸ் - ரூ. 20.05 கோடி (12 இடங்கள்)

பஞ்சாப் கிங்ஸ் - ரூ. 32.2 கோடி (12 இடங்கள்)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ. 8.75 கோடி (9 இடங்கள்)

ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ. 13.2 கோடி (13 இடங்கள்)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ. 42.25 கோடி (17 இடங்கள்)

மேலும் படிக்க | IPL 2023 : ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பு... வெளிநாட்டு வீரருக்கு வந்த சோதனை... ஐபிஎல்லில் பங்கேற்பது சந்தேகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More