Home> Sports
Advertisement

ஐபிஎல் 2020: RCB VS RR, ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

 IPL 2020 போட்டித் தொடரின் 15 வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கு இடையே அபுதாபியின் ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தனது வீரர்களின் வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கித் ராஜ்புத்துக்கு பதிலாக மஹிபால் லோமருக்கு வாய்ப்பு அளித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எந்த மாற்றமும் இல்லாமல் களத்தில் இறங்கியது.

ஐபிஎல் 2020: RCB VS RR, ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

அபுதாபி: IPL 2020 போட்டித் தொடரின் 15 வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கு இடையே அபுதாபியின் ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தனது வீரர்களின் வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கித் ராஜ்புத்துக்கு பதிலாக மஹிபால் லோமருக்கு வாய்ப்பு அளித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எந்த மாற்றமும் இல்லாமல் களத்தில் இறங்கியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. 20 ஓவர்களில் 155 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB). ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மஹிபால் லோமர் 47 ரன்கள் எடுத்தார். யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 155 ரன்களை நோக்கி களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புகு 158 ரன்கள் எடுத்தது. ஆர்.சி.பியின் தேவ்துத் பாடிக்கல் 45 பந்துகளில் 63 ரன்களும், விராட் கோலி 72 ரன்களும் எடுத்தனர்.

இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டித்தொடரில் இது ஆர்.சி.பியின் மூன்றாவது வெற்றி ஆகும். அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸின் இரண்டாவது தோல்வி இது.

சுலபமாக வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. ஆர்.சி.பியின் தேவ்துத் பாடிக்கல் 45 பந்துகளில் 63 ரன்களும், விராட் கோலி 72 ரன்களும் எடுத்தனர்.

பாடிக்கலுக்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்து வீசினார்

ஆர்ச்சரின் பந்தில் வீழ்ந்தார் பாடிக்கல். விராட் கோலியுடன் இணைந்து ரன்களை விளாசிய அந்தக் கூட்டணி உடைந்தபோது பாடிக்கல் 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்திருந்தார்.  

ஐ.பி.எல்லில் கோலியின் 37 வது அரைசதம்

விராட் கோலி,  இந்த ஐ.பி.எல். சீசனில்  தனது முதல் அரைசதத்தை எடுத்தார், விராட்டின் ஐபிஎல் வாழ்க்கையில் இது அவரது 37 வது அரைசதம் ஆகும்.

Also Read | போலந்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாஜி கப்பல் அம்பர் அறை புதையல் மர்மத்தை தீர்க்குமா?  

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More