Home> Sports
Advertisement

IPL 2020: 50வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வாகை சூடிய ராயல்ஸ்

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற IPL 2020 போட்டித்தொடரின் 50 வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings xi Punjab) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. நடப்பு சீசனின் தொடக்கத்தில் தொடர்ந்து தோல்வியடைந்து வந்த கே.எல்.ராகுல் (KL Rahul) தலைமையிலான பஞ்சாப் அணி சொதப்பிக் கொண்டிருந்தது.

 IPL 2020: 50வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வாகை சூடிய ராயல்ஸ்

Kings xi Punjab vs Rajasthan Royals: அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற IPL 2020 போட்டித்தொடரின் 50 வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings xi Punjab) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. நடப்பு சீசனின் தொடக்கத்தில் தொடர்ந்து தோல்வியடைந்து வந்த கே.எல்.ராகுல் (KL Rahul) தலைமையிலான பஞ்சாப் அணி சொதப்பிக் கொண்டிருந்தது.
திடீரென்று உக்திரீயில் சில முடிவுகளை எடுத்து அதை சரியாக செயல்படுத்தியதால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பதிவுசெய்து, முதல் நான்கு இடங்களில் இடம்பெற்றுவிட்டது. இந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் அட்டவணையில் நான்காவது இடத்தில் உள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. ராஜஸ்தான் ராயல்ஸ் 12 போட்டிகளில் ஆடி 10 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் முதலில் மட்டை வீச களம் இறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது;. தொடர்ந்து மட்டை வீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 17.3 ஓவர்களில், 3 விக்கெட் இழப்புக்கு186 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு இது மகுடம் சூடும் வெற்றி. அவர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இறுதியில் மிக எளிதாக வென்றனர். இந்த போட்டியின் மீது ராஜஸ்தான் கட்டுப்பாட்டை இழந்ததைப் போல தோற்றமளித்த நிலையில், திடீரென விளையாட்டு தடம் மாறியது. ராஜஸ்தானின் வெற்றியை 15 பந்துகளே முடிவு செய்தன.  
கிறிஸ் கெயிலின் அற்புதமான அதிரடி ஆட்டம் தொடர்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஒற்றை ரன்னில் சதம் அடிப்பதை தவறவிட்டார் கெய்ல்.
அவர் எதிர்கொண்ட 63 பந்துகளில் எட்டு சிக்ஸர்கள் மற்றும் ஆறு பவுண்டரிகளுடன் 99 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் 99 ரன்கள் எடுத்த கெய்ல், இந்த சீசனில் தனது மூன்றாவது அரைசதத்தை நிறைவு செய்தார். அதிக சிக்ஸர்கள் எடுத்தவர் என்ற மாபெரும் சாதனையும் படைத்துள்ளார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Read More