Home> Sports
Advertisement

IPL 2020 CSK vs RCB: விராட் vs தோனி; இன்றைய போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

சென்னை (Chennai Super Kings) பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், தொடர்ந்து வெற்றிகளை குவிக்க வேண்டும். 

IPL 2020 CSK vs RCB: விராட் vs தோனி; இன்றைய போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

IPL 2020 LIVE SCORE, CSK vs RCB: ஐபிஎல் 2020 தொடரின் 25 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. ஐபிஎல் புள்ளிகள் அட்டவணையில், ஆர்சிபி ஐந்தாவது இடத்திலும், சிஎஸ்கே ஆறாவது இடத்திலும் உள்ளன. சென்னை (Chennai Super Kings) பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், தொடர்ந்து வெற்றிகளை குவிக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், கோஹ்லி (Virat Kohli) மற்றும் தோனி (MS Dhoni) இருவரும் தங்கள் அணிகளை வெற்றி பெற வைப்பது முக்கியம்.

இந்த வருட இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2020) தொடரில் இரண்டு கேப்டன்களும் இதுவரை சிறப்பு எதுவும் செய்யவில்லை. முதல் மூன்று போட்டிகளில் சரியாக விளையாடத விராட் கோலி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்ததன் மூலம் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதே நேரத்தில், மகேந்திர சிங் தோனியின் ஆடும் போது, அவரது வயதின் விளைவு தெளிவாகக் காணலாம். புள்ளி அட்டவணையில் ஆர்.சி.பி ஐந்தாவது இடத்திலும், சி.எஸ்.கே ஆறாவது இடத்திலும் உள்ளன.

ALSO READ |  IPL 2020: மகேந்திர சிங் தோனியின் மகள் ஜீவாவுக்கு பாலியல் மிரட்டல்; பாதுகாப்பு அதிகரிப்பு

ஆர்.சி.பி.க்கு (Royal Challengers Bangalore) எதிராக 800 ரன்கள் அடிக்க தோனி இன்னும் ஏழு ரன்கள் தவை. மறுபுறம், விராட் கோலி சிஎஸ்கேவுக்கு (CSK) எதிராக 800 ரன்கள் எடுக்க 53 ரன்கள் தொலைவில் உள்ளார். இந்த இரண்டில் எந்த வீரர் இந்த இடத்தை அடைகிறார் என்பதை இன்றைய போட்டியில் காணலாம். தோனி ஆர்.சி.பி.க்கு எதிரான 27 போட்டிகளில் 41.78 சராசரியுடன் 793 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில், விராட் கோலி 40 க்கு மேல் சராசரியுடன் சிஎஸ்கேவுக்கு எதிராக 747 ரன்கள் எடுத்துள்ளார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More