Home> Sports
Advertisement

"இனி கடினமாக இருக்கும்" Retirement குறித்து ட்வீட் செய்த சிஎஸ்கே ஆல்ரவுண்டர் Shane Watson

ஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Shane Watson Retirement IPL: ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று (திங்கள்கிழமை) அறிவித்துள்ளார். 39 வயதான அவர் இந்த முடிவை முறையாக அறிவிக்கவில்லை, ஆனால் இறுதி முடிவை எடுத்துள்ளார். அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிரான சிஎஸ்கேவின் இறுதி ஐபிஎல் 2020 போட்டிக்கு பின்னர், ஓய்வு பெறலாம் என யோசித்து வருகிறார். KXIP அணிக்கு எதிரான போட்டியில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வென்றது.

"தனது ஓய்வு குறித்து ஷேன் வாட்சன் (Shane Watson) அதிகாரப்பூர்வமாக ஓரிரு நாட்களில் அறிவிப்பார், ஒருவேளை அவரது குடும்பத்தினருடன் பேசிய பிறகு மற்றும் அணியின் உரிமையாளருடேன் கலந்தோசித்து முடிவு செய்யலாம்" என நெருக்கமான வட்டாரம் தெரிவித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

 

ஷேன் வாட்சன் 2015 ஆம் ஆண்டில் ஒருநாள் உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய வென்ற பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு ஐபிஎல் போட்டிகளில் பம்கேற்றார்.  IPL தொடரை பொறுத்தவரை அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது. வெவ்வேறு அணிகளில் விளையாடி தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருந்தார். ஐபிஎல் தொடக்க சீசனில் போட்டியின் நாயகனாக வாட்சன் இருந்தார். அவரின் நல்ல பர்மான்ஸ் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் முதன் முதலில் கோப்பையை வென்றது. 

ALSO READ | நாங்கள் உங்களை ரொம்ப மிஸ் செய்வோம் ரெய்னா: வாட்சன் உருக்கமான வீடியோ வெளியீடு!!

ஐபிஎல் பயணம் (IPL Journey for Shane Watson)

அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டார் மற்றும் சென்னையை அணி மூன்றாவது ஐபிஎல் பட்டத்தை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார். அந்த பருவத்தின் இறுதிப் போட்டியில் வாட்சன் ஒரு சதம் அடித்தார். இவரின் அதிரடியால் CSK அணி கோப்பையை வென்றது. அதற்கு அடுத்த ஆண்டு (IPL Season 12) மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் நன்றாக ஆடிய சதத்தை நெருங்கிய அவர் 80 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த போட்டியில் காலில் ஏற்பட்ட காயத்தைக்கூட பொருட்படுத்தாமல் அணிக்காக விளையாடினார்.

IPL தொடரை பொறுத்த வரை 145 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3854 ரன்கள் எடுத்து, 92 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சர்வதேச அளவிலான கிரிக்கெட் வாழ்க்கை (International level cricket career):

சர்வதேச மட்டத்தில் 59 டெஸ்ட், 190 ஒருநாள், மற்றும் 58 டி 20 போட்டிகளில் விளையாடிய வாட்சன், 2007 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஐசிசி உலகக் கோப்பையை இரண்டு முறை வென்ற ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றிருந்தார். டெஸ்ட் போட்டிகளில், வாட்சன் 3731 ரன்கள் எடுத்து 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல ஒருநாள் போட்டிகளில் 5757 ரன்கள் மற்றும் 168 விக்கெட்டுகளை வீழ்த்தி, முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

Read More