Home> Sports
Advertisement

IPL வரலாற்றில் 4500 ரன்களை கடந்தார் CSK கேப்டன் MS.தோனி...!

ஐபிஎல் போட்டிகளில் சுமார் 4500 ரன்களை கடந்தார் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி...!

IPL வரலாற்றில் 4500 ரன்களை கடந்தார் CSK கேப்டன் MS.தோனி...!

ஐபிஎல் போட்டிகளில் சுமார் 4500 ரன்களை கடந்தார் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி...!

துபாயில் நடைபெற்று வரும் IPL 2020-யில் நேற்று சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் குவித்தது. CSK அணி சேஸிங்கில் மீண்டும் சொதப்பி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

165 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன் 1 ரன்னிலும், அம்பதி ராயுடு 8 ரன்னிலும், டூ பிளசிஸ் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்திருந்த போது தோனி களமிறங்கினார். 

ALSO READ | IPL 2020: 7 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்திடம் போராடி தோற்ற CSK..!

தோனி 24 ரன்கள் அடித்த போது IPL தொடரில் 4500 ரன்களை கடந்த 5 ஆவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். விராட் கோலி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், டேவிட் வார்னர், ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் IPL தொடரில் 4500 ரன்களை கடந்துள்ளனர். இந்தப் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 47 ரன்களை அடித்தார் தோனி. 

IPL தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் 

1) விராட் கோலி -  5430
2) சுரேஷ் ரெய்னா - 5368
3) ரோஹித் சர்மா - 5068
4) டேவிட் வார்னர் - 4821
5) ஷிகர் தவான் - 4648
6) ஏபிடி வில்லியர்ஸ் - 4529 
7) தோனி - 4523 

Read More