Home> Sports
Advertisement

ஐபிஎல் 2017: மும்பை - குஜராத் இன்று மோதல்

ஐபிஎல் 2017: மும்பை - குஜராத் இன்று மோதல்

10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. 

இதுவரை குஜராத் லயன்ஸ் அணி 8 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்றுள்ளது. முந்தைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை தோற்கடித்ததால் நம்பிக்கை அதிகரித்துள்ளது. 

தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி லீக்கில் புனேயிடம் 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

குஜராத் அணி ஏற்கனவே 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்று இருக்கிறது. 

இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு நடைப்பெற உள்ள போட்டியில் குஜராத் லயன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றனர்.

Read More