Home> Sports
Advertisement

INDvsSA: இந்திய சுழற்பந்து வீச்சில் சிக்கிய தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 269 எடுத்துள்ளது!

INDvsSA: இந்திய சுழற்பந்து வீச்சில் சிக்கிய தென்னாப்பிரிக்கா!

டர்பன் கிங்ஸ்மேட் மைதானத்தில் நடைப்பெற்று வரும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 269 எடுத்துள்ளது!

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

அதன்படி இன்று இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் இன்று டர்பன் கிங்ஸ்மேட் மைதானத்தில் நடைப்பெற்று வருகின்றது.

டாஸ் வென்று போட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய தென்னாப்பிரிக்கா, ஆரம்பம் முதலே இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் சிக்கி தவித்தனர்.  

துவக்க ஆட்டகாரர்களான ஆம்லா 16(17) மற்றும் கூக் 34(49) என சொற்ப ரன்களில் வெளியேறினர். 

பின்னர் களமிறங்கிய பிளெஸ்ஸிஸ் மட்டும் நின்று விளையாடி 120(112) ரன்கள் குவித்தார் எனினும். இதர வீரர்கள் தொடர்ந்து சொற்ப ரன்களில் வெளியேற தென்னாப்பிரிக்கா அணியால் 269 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் சாஹால் முறையே 3 மற்றும் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதனையடுத்து இந்தியா 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிரங்குகிறது!

Read More