Home> Sports
Advertisement

Ind Vs SL 2வது டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா!

தற்போதைய நிலவரம் வரை இந்தியா 172 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. கைவசம் 8 விக்கெட்டுக்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.!

Ind Vs SL 2வது டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த நவ., 24-ஆம் தேதி நாக்பூரில் தொடங்கியது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் தடுமாறிய இலங்கை அணி 205 ரன்களுக்கு தனது அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் இஷாந்த் ஷர்மா, ஜடேஜா தலா மூன்று விக்கெட்டும், அஸ்வின் நான்கு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்

பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸை துவங்கிய இந்தியா சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது.

முதல் ஆட்டம் முடிவுற்ற நிலையில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை ஆடிய இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்தது. புஜாரா 121 ரன்களுடனும், விராட் கோலி 54 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் ஆட்டத்தின் மூன்றாம் நாள் இன்று துவங்கியது. 

தற்போதைய நிலவரப்படி இந்தியா 120 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 377 ரன் எடுத்துள்ளது. விராட் கோலி 102(133) மற்றும் புஜாரா 138(353) ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போதைய நிலவரம் வரை இந்தியா 172 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. கைவசம் 8 விக்கெட்டுக்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More