Home> Sports
Advertisement

இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த ஜோஸ் பட்லர்! காரணம் இதான்!

IND vs ENG T20: கேப்டனாக பொறுப்பேற்று முதல் முறையாக இந்தியாவிற்கு எதிராக களமிறங்கவுள்ளது ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி.  

இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த ஜோஸ் பட்லர்! காரணம் இதான்!

கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 5) நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வரலாற்றுச் சிறப்புமிக்க டார்கெட்டை சேஸ் செய்து இந்தியாவை தோற்கடித்து தொடரை சமன் செய்தது.  இந்தியாவுக்கு எதிரான டெஸ்டை 2-2 என்ற கணக்கில் சமன் செய்து கோப்பையை பகிர்ந்து கொண்டது இங்கிலாந்து அணி.  இங்கிலாந்து அணியின் இந்த வெற்றிக்கு பட்லர் தனது வாழ்த்தை தெரிவித்தார். இங்கிலாந்து அணி அடுத்ததாக ஜூலை 7 முதல் இந்தியாவிற்கு எதிராக T20 தொடரில் விளையாட உள்ளது.  

fallbacks

மேலும் படிக்க | இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் பேராசை

மார்ச் 2022-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இங்கிலாந்து அனைத்து வடிவங்களிலும் வெற்றிப் பாதையில் உள்ளது. அதன் பிறகு, நெதர்லாந்திற்கு எதிராக விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகளிலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. புதிய கேப்டன் ஜோஸ் பட்லர் இந்தியாவிற்கு எதிராக முதல் முறையாக தனது அணியை வழிநடத்துவார், மேலும் அவர் மற்றும் அவரது சகாக்கள் தங்கள் வெற்றியை தொடரும் மனநிலையில் இருப்பதாக இந்திய அணியை எச்சரித்துள்ளார்.  இயோன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பட்லர் இங்கிலாந்து அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

fallbacks

விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் மோர்கன் இங்கிலாந்து அணியை பல வெற்றிகளுக்கு கொன்டு சென்றுள்ளார். இங்கிலாந்து அணியை 2019-ல் 50 ஓவர் உலகக் கோப்பையை வெற்றி பெற செய்தார்.  மேலும் இங்கிலாந்து அணியை பலம் வாய்ந்த அணியாக மாற்றினார்.  இது அவரை இங்கிலாந்தின் மிக வெற்றிகரமான ODI கேப்டனாக மாற்றியது.  

முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (Wk), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்   

மேலும் படிக்க | இந்திய அணிக்கு மேலும் அடி! இரண்டு புள்ளிகளை குறைத்த ஐசிசி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More