Home> Sports
Advertisement

3வது டெஸ்ட்: தினேஷ் கார்த்திக்கு பதிலாக இளம் வீரர் ரிஷாப் பந்த்

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக்கு பதிலாக இளம் வீரர் ரிஷாப் பந்த் தேர்வு செய்யப்பட்டார்.

3வது டெஸ்ட்: தினேஷ் கார்த்திக்கு பதிலாக இளம் வீரர் ரிஷாப் பந்த்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடேயேயான இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 9 ஆம் நாள் துவங்குவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக அடுத்த நாள் ஆட்டம் ஆரம்பமானது. இந்த டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

இந்நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும். இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை வெல்லும். அதேவேளையில் இந்திய அணி வெற்றி பெற்றலோ, அல்லது டிரா செய்தாலோ இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். 

இன்றைய டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்ககூடும் என எதிர்பார்க்கபட்டது. இன்று நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷாப் பந்த் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த மாற்றத்துக்கு காரணம் தினேஷ் கார்த்திக்கு ஏற்ப்பட்ட காயம் முழுமையாக குணம் அடையவில்லை. முதல் முறையாக சர்வேதச டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார் ரிஷாப் பந்த்.

கடந்த ஐபிஎல் 11 வது சீசனில் டெல்லி அணிக்காக விளையாடினார் ரிஷாப் பந்த். ஒரு கட்டத்தில் கெளதம் கம்பீர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய, அந்த இடத்திற்கு ரிஷாப் பந்த் தேர்வு செய்யப்பட்டார். தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More