Home> Sports
Advertisement

ஆஸி., அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடனம் ஆடிய கேப்டன்: வைரலாகும் வீடியோ

ஆஸி., அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நடனம் ஆடிய கேப்டன் விராத் கோலி. 

ஆஸி., அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடனம் ஆடிய கேப்டன்: வைரலாகும் வீடியோ

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்த நிலையில், தற்போது டெஸ்ட தொடர் நடைப்பெற்று வருகின்றது.

இத்தொடரின் முதல் போட்டி இந்திய நேரப்படி டிசம்பர் 6-ஆம் நாள் காலை 5.30 மணியளவில் துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் குவித்தது. இந்நிலையில் நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஷமி வெளியேற, இந்தியா 250 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 

இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸி., அணி வீரர்கள் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 88 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து இருந்தது. இன்று மூன்றாம் நாள் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் இந்திய அணியை விட 15 ரன்கள் பின்தங்கியது.

15 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆட தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய மூன்று விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியை விட 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்துக்கொண்டு இருக்கும் போது, பீல்டிங்கில் நின்றிருந்த இந்திய கேப்டன் விராட் கோலி ஜாலியாக டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தார். தற்போது அந்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Read More