Home> Sports
Advertisement

கடைசி ஓவர் போராட்டம் - தோற்றது இந்தியா; சஞ்சு சாம்சன் அசால்ட் ஆட்டம்!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

கடைசி ஓவர் போராட்டம் - தோற்றது இந்தியா; சஞ்சு சாம்சன் அசால்ட் ஆட்டம்!

மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களை விளையாட தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.  இதை தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நடைபெற்றது. முதல் போட்டி, லக்னோவில் உள்ள பாரத் ரத்னா அடல் பிகாரி வாஜ்பாஜ் எக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. லக்னோவில் தொடர் மழை பெய்து வந்த காரணத்தால், போட்டி இரண்டு மணிநேரம் தாமதமாக தொடங்கியது. மேலும், ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 40 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மில்லர் 75 ரன்களையும், கிளாசென் 74 ரன்களையும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, இந்திய அணியின் ஓப்பனர்களாக களமிறங்கிய சுப்மன் கில், கேப்டன் ஷிகர் தவான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த ருதுராஜ் 19, இஷான் கிஷன் 20 ஆகியோரும் சிறிதுநேரம் தான் தாக்குபிடித்தனர். இதன்பின், ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன் 67 ரன்கள் எடுத்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

மேலும் படிக்க | பாலியல் வழக்கில் கைதானார் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்!

ஷ்ரேயஸ் 37 பந்துகளஇல் 8 பவுண்டரிகள் உள்பட 50 ரன்களை எடுத்து, லுங்கி இங்கிடி பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். அடுத்துவந்த ஷர்துல் தாக்கூர், சஞ்சு சாம்சன் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி 93 ரன்களை குவித்தது. சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்து அசத்தினார். கடைசி மூன்று ஓவர்களுக்கு 45 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தாக்கூர் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் குல்தீப் யாதவ் டக்-அவுட்டானார்.

கடைசிக்கு முந்தைய ஓவரில் 37 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் ஆவேஷ் கான் ஸ்டிரைக்கில் இருந்தார். அந்த ஓவரில் சஞ்சு சாம்சனுக்கு ஸ்டிரைக் கொடுக்க ஆவேஷால் முடியவில்லை. அந்த ஓவரில் 2 ரன்களை மட்டும் எடுத்த ஆவேஷ், 5ஆம் பந்தில் அவுட்டானார். கடைசி பந்து நோ-பாலாக, ரவி பிஷ்னோய் ஃப்ரீ-ஹிட்டில் பவுண்டரி அடித்து உதவினார். 

இதனால், கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை சுழற்பந்துவீச்சாளர் ஷம்ஸி வீசு வந்தார். அப்போது, சஞ்சு சாம்சன் ஸ்டிரைக்கில் இருந்தார். முதல் பந்து வைடான நிலையில், மீண்டும் வீசப்பட்ட அந்த பந்தை சிக்ஸருக்கு அனுப்பி சாம்சன் மிரட்டினார். அடுத்தடுத்து, இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்ட அவர், தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடியை உண்டாக்கினார். 

இருப்பினும், அவரால் நான்காவது பந்தில் ரன் எடுக்க முடியவில்லை. தொடர்ந்து, அவரால் அடுத்த இரண்டு பந்துகளில்  ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. 

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட மொத்தம் 86 ரன்களை குவித்தார். தென்னாப்பிரிக்கா பந்துவீச்சில் இங்கிடி 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம், தென்னாப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | ஒரே இடத்தில் 2 கிரிக்கெட் ஜாம்பவான்கள்... ஆனால் வேறு களம் - வைராலகும் புகைப்படங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More