Home> Sports
Advertisement

வங்காளதேசம் vs இலங்கை ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது!!

இன்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. 

வங்காளதேசம் vs இலங்கை ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது!!

18:45 11-06-2019
மழையின் காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டதால், இரண்டு அணிக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம் இலங்கை அணி நான்கு ஆட்டங்களில் 4 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதேபோல வங்காளதேசம் நான்கு ஆட்டங்களில் 3 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.


18:30 11-06-2019
இன்று நடைபெற விருந்த வங்காளதேசம் மற்றும் இலங்கை ஆட்டம் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக கைவிடப்பட்டது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. 

 

 


14:53 11-06-2019
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதும் இன்றைய 16-வது லீக் ஆட்டம் நடைபெற விருந்த பிரிஸ்டலில் மழை பெய்து வருவதால், டாஸ் போவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

 

 


இன்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம்  பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெறும். இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

மஷ்ரஃப் மோர்தசா தலைமையிலனா வங்காளதேச அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. மற்ற இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இரண்டு புள்ளிகளுடன் உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் 8 வது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்து சந்தித்த தோல்விகளில் இருந்து மீண்டு வர வேண்டிய நெருக்கடி வங்காளதேச அணிக்கு இருக்கிறது.

அதேபோல இலங்கை அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் வெற்றியும் (DLS), பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டதால், இரண்டு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. மற்றொரு போட்டியில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் மூன்று புள்ளிகளுடன் உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் 6வது இடத்தில் உள்ளது. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் காயம் காரணமாக ஆட முடியாததால் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. 

இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமானது ஆகும். பிரிஸ்டலில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதால், இந்த போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இலங்கை: கருணாரத்னே (கேப்டன்), குசல் பெரேரா, திரிமன்னே, குசல் மென்டிஸ், மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா, திசரா பெரேரா, இசுரு உதனா, சுரங்கா லக்மல், மலிங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ

வங்காளதேசம்: தமிம் இக்பால், சவுமியா சர்கார், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன், மக்முதுல்லா, மொசாடெக் ஹூசைன், முகமது சைபுதீன், மெஹிதி ஹசன், மோர்தசா (கேப்டன்), முஸ்தாபிஜூர் ரகுமான்.

Read More