Home> Sports
Advertisement

5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி; முதலிடம் பிடித்தது ஐதராபாத்!

IPL 2019 தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி; முதலிடம் பிடித்தது ஐதராபாத்!

IPL 2019 தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

IPL 2019 தொடரின் 16-வது லீக் ஆட்டம் இன்று டெல்லி பெரோஸ் ஷா மைதானத்தில் நடைப்பற்றது. இப்போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசஸ் ஐதராபாத் அணியும் மோதின.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. 

fallbacks

டெல்லி அணி தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்திவி ஷா 11(11) மற்றும் ஷிகர் தவான் 12(14) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் 43(41) ரன்கள் குவித்து அணிக்க பலம் சேர்த்தார். எனினும் இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். 

இதன்மூலம் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார், நபி மற்றும் கவுல் தலா 2 விக்கெட் குவித்தனர். இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

துவக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 10(18) ரன்களில் வெளியேற, ஜான் பாரிஸ்டோவ் நிதானமாக விளையாடி 48(28) ரன்கள் குவித்தார். எனினும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற சற்று தடுமாறிய ஐதராபாத் அணி, நிதானமாக விளையாடி ஆட்டத்தின் 18.3-வது பந்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் குவித்தது. இதனையடுத்து ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இப்போட்டில் பெற்ற வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி IPL 2019 புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளது. 

Read More