Home> Sports
Advertisement

ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ஆப்கானிஸ்தான்... சத்ரான் சதம், ரஷித் சரவெடி - 292 ரன்கள் இலக்கு!

AUS vs AFG: நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்களை குவித்தது. 

ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ஆப்கானிஸ்தான்... சத்ரான் சதம், ரஷித் சரவெடி - 292 ரன்கள் இலக்கு!

ICC World Cup 2023, AUS vs AFG: நடப்பு உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று அதன் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது எனலாம். வரும் ஞாயிற்றுக்கிழமையோடு லீக் சுற்று போட்டிகள் நிறைவடைவதால் அரையிறுதியில் தனது இடத்தை உறுதிசெய்ய பல அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகிறது. அதில் இன்றைய போட்டியும் மிக முக்கியமான போட்டி ஆகும். 

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ஷாஹிடி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்மூலம், இப்ராஹிம் சத்ரான் - குர்பாஸ் ஆகியோர் ஓப்பனிங் இறங்கினர், இந்த ஜோடி 38 ரன்களை எடுத்த நிலையில் குர்பாஸ் 21 ரன்களில் அவுட்டானார். அடுத்து சத்ரான் உடன் ரஹ்மத் ஷா நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த ஜோடி 117 ரன்களை குவிக்க ரஹ்மத் ஷா 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மேலும் படிக்க | நேற்று சர்ச்சை... இன்று விலகல்... நாடு திரும்பும் கேப்டன் ஷகிப் - பின்னணி என்ன?

சத்ரான் கேப்டன் ஷாஹிடி உடன் சேர்ந்து மீண்டும் ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இந்த ஜோடி 52 ரன்களை சேர்த்தது. ஷாஹிடி 26 ரன்களில் அவுட்டாக அரைசதம் கடந்த சத்ரான் சதம் நோக்கி போய்கொண்டிருந்தார். அடுத்து வந்த ஓமர்ஸாய் 22, நபி 12 ரன்களில் ஆட்டமிழக்க சத்ரான் உடன் ரஷித் கான் ஜோடி சேர்ந்தார். 

சத்ரான் சதம் அடிக்கும் வரை மிக மிக பொறுமையாக விளையாடினார். அவர் தனது சதத்தை பதிவு செய்ததன் மூலம் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து கடைசி கட்டத்தில் ரஷித் கானும் அதிரடி காட்ட ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ரன்களை எடுத்தது. மேக்ஸ்வெல் வீசிய 46ஆவது ஓவரிலும், ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரிலும் தலா 16 ரன்கள் குவிக்கப்பட்டது. 

சத்ரான் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 129 ரன்களுடனும், ரஷித் கான் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உடன் 35 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், மேக்ஸ்வெல், ஸாம்பா தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். ஆஸ்திரேலியா இந்த ஸ்கோரை சேஸிங் செய்தால் ஆஸ்திரேலியா உலகக் கோப்பையில் சேஸ் செய்த அதிக ஸ்கோர் இதுவாகதான் இருக்கும்.

மேலும் படிக்க | இந்த இந்திய வீரர்களுக்கு ஓய்வு? - அணியில் முக்கிய வீரர் - அடுத்த போட்டியில் நிறைய மாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More