Home> Sports
Advertisement

பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் ஹர்விந்தர் சிங்

வில்வித்தை போட்டியில் முதல் முறையாக பதக்கம் வென்ற இந்திய வீரர் ஹர்விந்தர் சிங். இவர் மூலம் இந்தியாவுக்கு 13வது பதக்கம் கிடைத்துள்ளது.

பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் ஹர்விந்தர் சிங்

டோக்கியோ பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் ஹர்விந்தர் சிங் (Harvinder Singh) இந்தியாவுக்கு 13வது பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். இந்த போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வில்வித்தை வீரர் ஆவார். வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அவர் 6-5 என்ற கணக்கில் கொரிய வீரரை தோற்கடித்தார். ஐந்து செட் ஆட்டங்களுக்குப் பிறகு இரு வீரர்களும் 5-5 என சமநிலையில் இருந்தனர். இதன் பிறகு நடந்த செட்டில் கிம் எட்டு புள்ளி எடுத்தார். அதேநேரத்தில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் 10 புள்ளிகளை பெற்று பதக்கத்தை கைப்பற்றினார்.

டோக்கியோ பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஹர்வீந்தர் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்திய பிரதமர் மோடி (PM Modi) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜகார்த்தா ஆசிய விளையாட்டு 2018 பாரா வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமையையும் ஹர்விந்தர் சிங் பெற்றுள்ளார். இவர் ஒரு நடுத்தர விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஒன்றரை வயதில் டெங்கு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் ஊசி போட்டுள்ளனர். ஆனால் அது எதிர்மறையான விளைவைக் கொடுத்ததால், அவரது கால்கள் செயலிழந்தது.

ALSO READ | பாரா ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை அவனி லேகாரா சாதனை

ஐந்து போட்டிகள் பங்கேற்ற ஹர்விந்தர் சிங்:
இன்று (வெள்ளிக்கிழமை) ஹர்விந்தர் ஐந்து போட்டிகளில் விளையாடினார். முதலில் இத்தாலியின் ஸ்டெஃபானோ டிராவிசானியை தோற்கடித்தார். இதற்குப் பிறகு, அடுத்த சுற்றில், அவர் ROC இன் பாட்டோ சிதேந்தர்ஹாசேவை தோற்கடித்தார். மிக நெருக்கமான இரண்டு போட்டிகளின் மூன்றாவது சுற்றில், ஜெர்மனி 6-2 என்ற கோல் கணக்கில் மெக் சாரஸ்ஸெவ்ஸ்கியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் அமெரிக்காவின் கெவின் மாதரிடம் தோல்வியடைந்தார். கெவின் 4-6 என்ற கணக்கில் ஹர்விந்தர் சிங்கை தோற்கடித்தார்.

ஒரே நாளில் மூன்று பதக்கம்:
டோக்கியோ பாராலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இந்தியாவின் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே நேரத்தில், இரண்டாவது பதக்கத்தை துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவனி லேகாரா வென்றார். 50 மீ துப்பாக்கி சுடும் SH-1 போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். தற்போது வில்வித்தை போட்டியில் ஹர்விந்தர் சிங் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கத்தை பெற்றுத் தந்தார்.

ALSO READ | Tokyo Paralympics: இந்தியாவின் பிரவீன் குமார் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார்

இதுவரை இரண்டு தங்கம், ஆறு வெள்ளி (Silver medal) மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 13 பதக்கங்களை இந்தியா கைப்பற்றி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More