Home> Sports
Advertisement

பிரபல கால்பந்து ஆட்டக்காரருக்கு இரண்டு மாதம் தடை!

கடந்த ஜூலை மாதம் பெருவுக்கு எதிரான கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியின் போது மான்செஸ்டர் சிட்டி ஸ்ட்ரைக்கர் கேப்ரியல் ஜீசஸு மைதான விதி மீறி நடந்ததாக அவருக்கு இரண்டு மாத தடை விதிக்கப்பட்டுள்ளது!

பிரேசிலில் கடந்த மாதம் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

இறுதிபோட்டியில் 70-வது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் கேப்ரியல் ஜீசஸு முரட்டுதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 

மைதானத்தை விட்டு வெளியேறுகையில் கேப்ரியல் ஜீசஸு போட்டி அதிகாரிகள் உட்கார அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக ‘டக்-அவுட்’ மற்றும் வீடியோ உதவி நடுவருக்காக வைக்கப்பட்டு இருக்கும் மானிட்டரை உதைத்து தள்ளினார். பின்னர் தனது நடவடிக்கைக்கு கேப்ரியல் ஜீசஸு வருத்தம் தெரிவித்தார். 

fallbacks

எனினும் இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்திய தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு 22 வயதான பிரேசில் வீரர் கேப்ரியல் ஜீசஸ் சர்வதேச போட்டிகளில் 2 மாதம் விளையாட தடை விதித்துள்ளது. அத்துடன் அவருக்கு ரூ.21 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒழுங்கு விதிமுறையை மீறியதாக பிரேசில் கால்பந்து கூட்டமைப்புக்கு ரூ.10½ லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Read More