Home> Sports
Advertisement

சென்னை அணியின் தோல்விக்கான 4 காரணங்கள் இவை தான்

4 முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை அணி இந்த முறை முதல் வெற்றியை பெற போராடிக் கொண்டிருக்கிறது. 

சென்னை அணியின் தோல்விக்கான 4 காரணங்கள் இவை தான்

இந்த ஐபிஎல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கசப்பான தொடக்கமாக அமைந்துள்ளது. ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுகிறார். ஜடேஜா புதிய கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அவரது தலைமையிலான சென்னை அணி தொடர்ந்து 4 தோல்விகளை எதிர்கொண்டிருப்பதற்கு 4 காரணங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.

மேலும் படிக்க | சென்னையை விட்டுக்கொடுக்காத மும்பை! தொடர்ந்து 4வது போட்டியிலும் தோல்வி!

ஆல்ரவுண்டர்கள் ஃபார்ம்

சென்னை சூப்பர் கிங்ஸின் மிகப்பெரிய பலம் அதன் ஆல்-ரவுண்டர்கள் தான். மொயீன் அலி, ஷிவம் துபே, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கும் அந்த அணியில், அவர்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை. பேட்டிங்கில் ஜொலிப்பவர்கள், பந்துவீச்சில் கோட்டைவிடுகின்றனர். கேப்டன் ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இன்னும் சிறப்பாக செயல்படாதது அந்த அணிக்கு கவலையாக உள்ளது. 

fallbacks

கேப்டனாக ஜடேஜா செயல்பாடு

கேப்டனாக ஜடேஜாவின் செயல்பாடு மோசமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. அவர் சென்னை அணியின் கேப்டனாக இருந்தாலும், போட்டியின்போது பெரும்பாலான நேரங்களில் பவுண்டரி எல்லைகளிலேயே நின்று கொண்டிருக்கிறார். பந்துவீச்சு மாற்றம் உள்ளிட்ட முடிவுகளில் அவர் முடிவு எடுப்பதாக தெரியவில்லை. தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், அவர் தான் முக்கிய முடிவுகளை எடுப்பதாக தெரிகிறது. இது ஜடேஜா மீதான அழுத்ததை கூட்டியுள்ளது. 

வலுவான தொடக்க ஜோடி 

சென்னை அணியின் ஓபனிங் சரியாக இல்லை. கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் ஓபனிங் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால், இந்த முறை ஓபனிங் பேட்ஸ்மேன்களிடம் இருந்து சரியான இன்னிங்ஸ் வரவில்லை. ருதுராஜ் ரன் அடிக்காமல் திணறி வருகிறார். உத்தப்பா சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகிறார். இது அந்த அணியின் வெற்றிக்கான பங்களிப்பில் பாதகமாக உள்ளது. 

fallbacks

பந்துவீச்சு பலவீனம் 

பேட்டிங்கை காட்டிலும் மிகப்பெரிய பலவீனமாக இருப்பது பந்துவீச்சு தான். சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவரான தீபக் சாஹர் காயம் காரணமாக இந்த ஐபிஎல் போட்டியில் இதுவரை களமிறங்கவில்லை. மற்ற பந்துவீச்சாளர்களும் சரியாக பந்துவீசாததால் சென்னை சூப்பர் கிங்ஸ் 200 ரன்களை அடித்தால் கூட எதிரணியினர் சேஸ் செய்துவிடுகின்றனர். 

மேலும் படிக்க | மீண்டும் சொதப்பிய சிஎஸ்கே! பிளே ஆப் வாய்ப்பு பறிபோனதா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More