Home> Sports
Advertisement

இந்திய அணியின் குறைகளை சுட்டிக்காட்டும் கபில்தேவ்...

இந்திய அணியின் பந்துவீச்சில் ஆங்காங்கே குறைகள் இருப்பதாக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் குறைகளை சுட்டிக்காட்டும் கபில்தேவ்...

டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் விராட் கோலி துணையுடன் த்ரில் வெற்றி பெற்றது. அதேபோல் அடுத்ததாக நடந்த நெதர்லாந்து அணியுடனான போட்டியிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்தச் சூழலில் இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை பெற்றாலும் சில குறைகள் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக் அவர் கூறுகையில், “இந்தியாவின் பந்துவீச்சு மெருகேறிவருகிறது. பேட்டிங்கில் நாம் கூடுதலாக ரன் அடிக்க வேண்டும். ஆனால் கடைசி பத்து ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்கு மேல் அடித்து சமாளித்துவிடுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் இருக்கும் மைதானங்கள் அனைத்தும் பெரியவை. இதனால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகம்.

இந்திய அணியின் பந்துவீச்சில் ஆங்காங்கே குறைகள் இருக்கின்றன. நெதர்லாந்து போன்ற அணிக்கு எதிராக கூட நாம் சரியான திட்டமிடாமல் பந்துவீசினோம். அது போன்ற ஆட்டத்தை நீங்கள் ஒரு பயிற்சியாக நினைக்க வேண்டும். அதற்காக வெற்றி முக்கியம் இல்லை என சொல்லவில்லை. அந்த ஆட்டங்களில் நீங்கள் நோ பால், வைடு வீசக்கூடாது. 

fallbacks

சூர்யகுமார் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் ரன்களை வேகமாக அடிக்கிறார். இதனால் அவரை அதிகமாக புகழ வேண்டும். இதேபோன்று கேப்டன் ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமாகும். அதேபோல், ராகுலும் முக்கிய போட்டிகளுக்கு முன்பு ரன்களை அடிக்க வேண்டும்.

மேலும் படிக்க | T20 World Cup: புள்ளி பட்டியலில் இந்தியா டாப்: அரையிறுதிக்கு செல்ல அந்த ஆட்டம் முக்கியம்

விராட் கோலியை பொறுத்தவரை அவர் 20 ஓவர்களும் நின்று விளையாட வேண்டும். ஏனெனில் அவர் எப்போது வேண்டுமானாலும் வேகமாக அடித்து ரன் குவிப்பவர்” என்றார்.

மேலும் படிக்க | நெதர்லாந்து அணிக்கு எதிராகவும் கெத்து காட்டிய விராட்; ஏபி டிவில்லியர்ஸ் போல் ஆடிய சூர்யகுமார் யாதவ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More