Home> Sports
Advertisement

யு-17 பிபா உலகக் கோப்பை கால்பந்து தீம் சாங் அறிமுகம்!!

யு-17 பிபா உலகக் கோப்பை கால்பந்து தீம் சாங் அறிமுகம்!!

நேற்று 17 வயதுக்கு உட்பட்ட பிபா உலக கோப்பை கால்பந்து தொடருக்கான அதிகாரப்பூர்வ தீம் சாங் வெளியிடப்பட்டது.

இந்தியாவில் முதல் முறையாக் பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ தீம் பாடல் நேற்று கொல்கத்தாவில் வெளியிடப்பட்டது. இந்த பாடலை உள்ளூர் மாநாட்டுக் குழு (LOC) மற்றும் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் தயாரித்துள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார். இந்த பாடல் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் தனித்துவத்தை நிரூபிக்கிறது.

பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கி அக்டோபர் 28-ம் தேதி வரை கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இந்த பாடலில் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Read More