Home> Sports
Advertisement

போடா லூசு! லியோனல் மெஸ்ஸியின் ஆக்ரோஷம் வைரல்! அம்பியா? ரெமோவா? ரசிகர்கள் அதிர்ச்சி

Go Ahead STUPID Blame By Lionel Messi: கோபத்தில் கட்டுப்பாட்டை இழந்த லியோனல் மெஸ்ஸி, நெதர்லாந்தின் நட்சத்திர வீரர் வவுட் வெகோர்ஸ்ட் மற்றும் பயிற்சியாளர் லூயிஸ் வான் கால் இருவரையும் திட்டும் வீடியோ வைரலாகிறது. 

போடா லூசு! லியோனல் மெஸ்ஸியின் ஆக்ரோஷம் வைரல்! அம்பியா? ரெமோவா? ரசிகர்கள் அதிர்ச்சி

Lionel Messi Angry: கோபத்தில் கட்டுப்பாட்டை இழந்த லியோனல் மெஸ்ஸி, நெதர்லாந்தின் நட்சத்திர வீரர் வவுட் வெகோர்ஸ்ட் மற்றும் பயிற்சியாளர் லூயிஸ் வான் கால் இருவரையும் திட்டும் வீடியோ வைரலாகிறது. ஃபிஃபா உலகக் கோப்பையின் காலிறுதியில் நெதர்லாந்தை அர்ஜென்டினா தோற்கடித்ததையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு லியோனல் மெஸ்ஸி, வவுட் வெகோர்ஸ்ட் மற்றும் பயிற்சியாளர் லூயிஸ் வான் காலை கோபத்துடன் எதிர்கொண்டார். சாந்தமான கூல் மெஸ்ஸி, கோபமடைந்து செய்த செய்கைகளும் லியோனல் மெஸ்ஸியின் மற்றொரு பக்கத்தைக் காட்டியது.

'கோ அஹெட் ஸ்டுபிட்' என்று கோபத்தில் மெஸ்ஸி சொன்ன வார்த்தைகள், உண்மையில் அந்நியன் அம்பியாக இருக்கும் லியோனல் மெஸ்ஸியின் ரெமோ பக்கத்தை உலகத்திற்கு காட்டியது. ஃபிஃபா உலகக் கோப்பை 2022 இன் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை இரவு நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில் த்ரில்லான பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் அடிக்க வந்த லியோனல் மெஸ்ஸி கூலாகவே இருந்தார்.

மேலும் படிக்க | அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை சாய்த்த பாக்., பவுலர்

ஆனால், போட்டிக்குப் பிறகு நெதர்லாந்து கால்பந்து வீரர் வூட் வெகோர்ஸ்ட்டை அவர் சும்மா விடவில்லை. மெஸ்ஸி கால்பந்து மைதானத்தில் ஒரு நிருபருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வூட் வெகோர்ஸ்ட் குறுக்கிட்டபோது, தனது பொறுமையை இழந்த மெஸ்ஸி, தள்ளிப்போ என்று கடுப்பாக பேசினார்.. "யாரைப் பார்க்கிறாய்? முட்டாளே முன்னே போ" என்று மெஸ்ஸி சொல்வது வீடியோவில் தெளிவாக கேட்கிறது. அந்த வீடியோவைக் கேட்டுப் பாருங்கள்

அர்ஜெண்டினாவுடனான நெதர்லாந்து அணியின் போட்டிக்கு முன்னதாக, நெதர்லாந்து பயிற்சியாளர் லூயிஸ் வான் கால் ஒரு வார்த்தையை விட்டிருந்தார். FIFA 2023 கால் இறுதிப் போட்டி மோதலுக்கு முன்பு பேசிய அவர், மெஸ்ஸியை எப்படி தடுத்து நிறுத்துவது என்பது தனக்குத் தெரியும் என்று கூறியிருந்தார். "வெள்ளிக்கிழமை மெஸ்ஸியை நான் எப்படி நிறுத்துவேன் என்பதை பாருங்கள், அதை வார்த்தையால் சொல்ல மாட்டேன்" என்று அவர் சொல்லியிருந்தார்.

போட்டியின்போது, நான்காவது கோலை அடித்த பிறகு மெஸ்ஸி, வான் காலின் முன்னால் காதுகளை கைகளால் பிடித்து, நக்கல் காட்டினார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின்றன.

fallbacks

போட்டியின் முடிவில், மெஸ்ஸி லூயிஸ் வான் கால் அருகே சென்றார். அவரைத் தடுக்க முயன்றபோதும், ஊழியர்களும் மற்ற அதிகாரிகளும் முயன்ற போதிலும் அவர் அருகே சென்று கோபப்பட்டார். போட்டிக்கு முன், தன்னைப் பற்றி லூயிஸ் வான் கால் கூறிய கருத்துக்களால் காயப்பட்டதாக மெஸ்ஸி வெளிப்படையாக தெரிவித்தார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பையின் போட்டியில் மெஸ்ஸியை எப்படி நிறுத்துவது என்பது எனக்கு தெரியும் என்று லூயிஸ் வான் கால் கூறியிருந்தார். இதற்கு தனது விளையாட்டால் மட்டுமல்ல, சைகைகளாலும் பதிலடி கொடுத்த மெஸ்ஸி, சூடான வார்த்தைகளையும் சொன்ன பிறகே திருப்தி அடைந்தார்.

இந்த வலுவான அர்ஜென்டினா அணிக்கு உலகக் கோப்பையில் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், காலிறுதி போட்டி மெஸ்ஸிக்கு அருமையாக அமைந்துவிட்டது. மெஸ்ஸியின் உலகக் கோப்பை கனவு உயிருடன் இருக்கிறது, இந்த போட்டியுடன், விளையாட்டில் இருந்து லியோனல் மெஸ்ஸி ஓய்வு பெற்றுவிடுவார் என்பதால், அவர் கோப்பையை தனது அணிக்கு சொந்தமாக்குவதில் மும்முரமாகவே இருப்பார். 

மேலும் படிக்க | அடுத்த ஆண்டு இந்திய அணி விளையாடும் போட்டிகள்: முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More