Home> Sports
Advertisement

IPL 2020க்கு பிறகு ஆஸ்திரேலியா போகாமல், ரோஹித் ஷர்மா நாடு திரும்பிய காரணம் தெரியுமா?

IPL 2020 போட்டித்த்தொடருக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரோஹித் ஷர்மா (Rohit Sharma), போட்டிகளில் கலந்துக் கொள்ள ஆஸ்திரேலியா செல்லாமல், நாடு திரும்பிய காரணம் என்ன என்று கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

IPL 2020க்கு பிறகு ஆஸ்திரேலியா போகாமல், ரோஹித் ஷர்மா நாடு திரும்பிய காரணம் தெரியுமா?

IPL 2020 போட்டித்தொடருக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரோஹித் ஷர்மா (Rohit Sharma), போட்டிகளில் கலந்துக் கொள்ள ஆஸ்திரேலியா செல்லாமல், நாடு திரும்பிய காரணம் என்ன என்று கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பியுள்ளனர். இந்தக் குழப்பத்தை தீர்க்கும் வகையில் BCCI விளக்கம் கொடுத்துள்ளது.
காயம் காரணமாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடரின் (IPL) போது இடது பின்தொடையில் தசைநார் கிழிந்து காயமடைந்தார் ரோஹித் ஷர்மா.  டெஸ்ட் அணியில் மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்ட  ரோகித் சர்மா, அதற்கு முன்பாக உடல்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அவர் உடல்தகுதியை மீட்டெடுப்பதற்கான பயிற்சிகளை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் டாக்டர்கள், பயிற்சியாளர்கள் முன்னிலையில் மேற்கொண்டுள்ளார்.  ஆனால் இதுவரை ரோஹித் ஷர்மா முழுமையாக குணமடையவில்லை என்பதால், அவர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டிகளில் பங்கெற்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது 

தனது உடல்நிலை சரியில்லாத தந்தையுடன் இருப்பதற்காக ரோஹித் சர்மா (Rohit Sharma) இந்தியாவிற்கு வர வேண்டியிருந்தது என்றும் பி.சி.சி.ஐ விளக்கம் அளித்துள்ளது.  இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்காக தனது இந்தியா அணியினருடன் ரோஹித் ஷர்மா எப்போது வந்து சேர்வார் என்பது பற்றி  ‘தெளிவாக தெரியவில்லை’ என்று கேப்டன் விரால் கோலி கூறியிருந்தார். இது பல்வேறு வதந்திகளையும், சர்ச்சைகளையும் கிளப்பியது. எனவே கோலியின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பி.சி.சி.ஐ சில மணி நேரங்களில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ALSO READ | Gautam Gambhir: விராட் கோலி ஒரு மோசமான கேப்டன் அல்ல, ஆனால் ரோஹித் சர்மா சிறந்தவர்

 ரோஹித் சர்மாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், ஐ.பி.எல். தொடருக்குப் பிறகு மும்பைக்கு திரும்பி வர வேண்டியிருந்தது. அவரது தந்தை இப்போது நன்றாக குணமடைந்து வருகிறார். எனவே, ரோஹித் ஷர்மா தற்போது பெங்களூருவில் உள்ள  என்.சி.ஏ-வில் (National Cricket Academy in Bengaluru) இருக்கிறார்”என்று பி.சி.சி.ஐ செயலாளர் ஜே ஷா (Jay Shah) வெளியிட்ட  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரோஹித் ஷர்மாவின் தொடையில் காயம் ஏற்பட்ட தகவல் தேர்வுக் கூட்டத்திற்கு முன்னதாக தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக கோஹ்லி கூறினார், ஆனால் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்கு (Mumbai Indians) விளையாடிக் கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவின் உடல்நிலை குறித்து, அதற்கு பின் தனக்கு எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்று விராட் கோலி தெரிவித்திருந்தார்.  

டிசம்பர் 11 ஆம் தேதியன்று ரோஹித் ஷர்மா இறுதி உடற்பயிற்சி சோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று பி.சி.சி.ஐ செயலாளர் ஜே ஷா தெரிவித்துள்ளார். "அவர் (ரோஹித்) தற்போது என்.சி.ஏவில் இருக்கிறார். ரோஹித் ஷர்மாவின் அடுத்த பரிசோதனை டிசம்பர் 11 ஆம் தேதி நடத்தப்படும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ரோஹித் ஷர்மா பங்கேற்பது குறித்து பிசிசிஐ (BCCI) தெளிவுபடுத்தும் ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரோஹித் போட்டியில் கலந்துக் கொள்வதற்கு தனது உடல் தகுதியை (match fitness) நிரூபிக்க வேண்டும்.  உடல் தகுதி உறுதிப்படுத்தப்பட்டால், அதன்பிறகு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியிடம் கோரி, இந்திய பேட்ஸ்மேன் ரோஹ்த் ஷர்மாவுக்கு ’தளர்த்தப்பட்ட தனிமைப்படுத்தல்’ (soft quarantine period) தொடர்பாக சலுகை கோருவார். அப்பொதுதான், ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் களம் இறங்க முடியும்.  

இதற்கிடையில், வயிற்றின் அடிப்பகுதியில் காயம் அடைந்த இஷாந்த் சர்மா சுற்றுப்பயணத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

ALSO READ | அன்று களை எடுப்பாளர், இன்று ஆஸ்திரேலியாவின் மிக வெற்றிகரமான spinner @Nathan Lyon

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More