Home> Sports
Advertisement

மறக்க முடியாத ரன் அவுட்... குழந்தையை போல் அழுத தோனி - 2019 சோகக்கதை!

IND vs NZ: கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பின், தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் டிரஸ்ஸிங் ரூம்மில் சிறு பிள்ளையை போன்று அழுதார்கள் என சஞ்சய் பாங்கர் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார். 

மறக்க முடியாத ரன் அவுட்... குழந்தையை போல் அழுத தோனி - 2019 சோகக்கதை!

ICC World Cup 2023, IND vs NZ: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 21ஆவது லீக் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதின. ஐசிசி தொடர்கள் என்றாலே இந்தியா மீது நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருவதை கடந்த 2 தசாப்தங்களாக நாம் பார்த்திருப்போம். அதில் முக்கியமான போட்டி என்றால் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியைதான் பலரும் அடிக்கடி நினைவுக்கூருவார்கள்.

அழிக்க முடியாத நினைவு

மழை காரணமாக சுமார் இரண்டு நாள்களாக இங்கிலாந்து நகரின் மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் இந்தியா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதில் தோனியை குப்தில் ரன் அவுட்டாக்கிய சம்பவம் இன்றும் பலரின் மனதில் அழிக்க முடியாத காட்சியாக பதிவாகிவிட்டது. 

அதில் தோனி ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு சோகத்துடன் திரும்பும் காட்சி போன்றவை இன்றும் பலருக்கும் கண்ணீர் வர வைக்கும் ஒன்றாகும். அந்த வகையில், இன்றைய போட்டியை முன்னிட்டு அன்றைய போட்டியை நினைவுக்கூரும் வகையில் தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | ரோஹித்திற்கு விரலில் காயம் - மோசமானதா தரம்சாலா மைதானம்... என்ன பிரச்னை?

குழந்தையே போல் அழுத வீரர்கள்

2019இல் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகக இருந்த சஞ்சய் பாங்கர் அதுகுறித்து தற்போது பேசியுள்ளார். இன்று போட்டி நடைபெறும் தரம்சாலா ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் பேசிய அவர்,"இந்தியா சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்ததால் அனைத்து வீரர்களுக்கும் அது இதயத்தை நொறுக்கச் செய்த சம்பவமாகும். 

லீக் சுற்றில் நாங்கள் ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றோம். அந்த வகையில் அந்த முறையில் தொடரில் இருந்து வெளியேறுவதை ஏற்க முடியவில்லை. இந்திய வீரர்கள் சிறு பிள்ளையைப் போல அழுதனர். தோனி ஒரு குழந்தையைப் போல அழுது கொண்டிருந்தார். ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பந்த் கண்களில் கண்ணீர் வந்தது. அந்த கதைகள் டிரஸ்ஸிங் ரூம்மிலேயே நிறைவுபெற்றுவிடுகின்றன" என்றார்.

கடந்த 2003ஆம் ஆண்டு முதல் இந்தியா நியூசிலாந்து அணியை மூன்று பார்மட்களிலும் ஐசிசி தொடர்களின் போட்டியில் வென்றதே இல்லை. இன்றாவது அந்த மோசமான சாதனையை ரோஹித் தலைமையிலான இந்திய அணி மாற்றுமா என்ற கேள்வி உள்ளது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா, நியூசிலாந்து அணிகள்தான் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுகின்றன. அந்த வகையில், இன்றைய போட்டியில் எந்த அணி முதல் தோல்வியை தழுவும் என எதிர்பார்ப்பு உள்ளது. 

மேலும் படிக்க | இனி ஷர்துல எடுப்பீங்களா... சொல்லியடித்த ஷமி; கடைசி கட்டத்தில் சுதாரித்த இந்தியா - பகையை தீர்க்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More