Home> Sports
Advertisement

நான் நல்ல கேப்டன்! யாரு சொன்னா... அவரே சொல்லிக்கிட்டார்

நான் ஒரு நல்ல கேப்டனாக மாறிவிட்டேன் என இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.   

நான் நல்ல கேப்டன்! யாரு சொன்னா... அவரே சொல்லிக்கிட்டார்

IND vs NZ ODI: இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்த தொடரில் ஷிகர் தவான் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இது குறித்து அவர் பேசும்போது, நான் ஒரு நல்ல கேப்டனாக மாறிவிட்டேன், எப்போது, எந்த முடிவு எடுக்க வேண்டும் என எனக்கு தெரியும் என தெரிவித்துள்ளார். 

நியூசிலாந்து தொடர் 

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 1-0 என வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ஒருநாள் போட்டியில் இந்திய அணி பங்கேற்கிறது. ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவான் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. தவான் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பது இது முதல் முறையல்ல. முன்னதாக, இவரது தலைமையில் இந்தியா இலங்கைக்கு எதிராக 3-2 என்ற கணக்கிலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது. 

மேலும் படிக்க | உலகக்கோப்பை தோல்வி! ஆஸ்திரேலியா செய்த அதிரடி மாற்றம்!

தவான் நம்பிக்கை

நியூசிலாந்து தொடருக்கு முன்பாக இது குறித்து பேசிய ஷிகர் தவான், ஒரு கேப்டனாக தான் மேம்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். எப்போது பிடியை இறுக்க வேண்டும், எப்போது பிடியை இலகுவாக்க வேண்டும் என தெரியும் என தெரிவித்துள்ளார். மோசமான சூழ்நிலையில் எப்படி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் நன்கு முதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தவான் கூறியுள்ளார்.

சமநிலை முக்கியமானது

தொடர்ந்து அவர் பேசும்போது, " அணியில் சமநிலை முக்கியமானது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது நன்கு தெரிந்து கொண்டேன். உதாரணமாக, ஒரு பந்துவீச்சாளர் ஓவரில் பவுண்டரி, சிக்சர் செல்கிறது என்றால், அவரிடம் பேசுவது அவசியம். ஆனால் அப்போது பேசமாட்டேன். சிறிது நேரம் கழித்து அவர் கூலான பிறகு பேசுவேன். ஐபிஎல் தொடர் அனைத்து வீரர்களுக்கும் மிகப்பெரிய அனுபவமாக இருக்கிறது. அதில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த தொடர் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்தார். 

மேலும் படிக்க | இந்த சாதனைகள் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை: ஜெகதீசனை நீக்கிய சிஎஸ்கே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More