Home> Sports
Advertisement

Ind Vs SL: இந்தியாவை பிடிக்க இன்னும் 7 ரன் தான்!

நாளை 4 ஆம் நாள் ஆட்டம் 15 நிமிடம் முன்னதாகவே தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

 Ind Vs SL: இந்தியாவை பிடிக்க இன்னும் 7 ரன் தான்!

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் வியாழன் அன்று காலை துவங்கியது. மழை பெய்ததால், சற்று ஈரப்பதம் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

உணவு இடைவேளைக்கு பிறகே டாஸ் போடப்பட்டது.! 

டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. எனவே இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது

முதல் ஓவரில் இலங்கை வீரர் லக்மால் வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆனார் இந்திய தொடக்க வீரர் ராகுல்(0). இதனால் இந்தியா முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டை இழந்தது. பின்னர் இந்திய வீரர் புஜாரா மற்றும் தவான் ஆடினர். லக்மால் வீசிய 7_வது ஓவரில் ஷிகர் தவான் 8 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆனார். இந்திய அணி 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை வந்தததால், ஆட்டம் கைவிடப்பட்டது.`

மழை ஓய்ந்ததும் இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட் செய்ய தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதனையடுத்து 2-ஆம் நாள் ஆட்டத்தினை வெள்ளி அன்று காலை இந்தியா துவங்கியது. பின்னர் நேற்றைய தினம் போலவை இன்றும் ஆட்டத்திலும் மழை குறுக்கீட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் மீண்டும் பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு சுருண்டது.

பின்னர் களமிரங்கிய இலங்கை அணி, ஆரம்பத்தில் சருக்கிய போதிலும் பின்னர் சற்றே சுதாரித்துக்கொண்டு, நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். 

மூண்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி, 45.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. 

நாளை 4 ஆம் நாள் ஆட்டம் 15 நிமிடம் முன்னதாகவே தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

Read More