Home> Sports
Advertisement

ஐபிஎல் 2022; அதிரடிக்குப் பின் மில்லர் அடித்த கிண்டல்

ஐபிஎல் முதல் குவாலிஃபையரில் மில்லரின் அதிரடியால் குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.  

ஐபிஎல் 2022; அதிரடிக்குப் பின் மில்லர் அடித்த கிண்டல்

ஐபிஎல் முதல் குவாலிஃபையரில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்ட குஜராத் அணி, சிறப்பான ஆட்டத்தால் அந்த அணியை தோற்கடித்தது. டாஸ் வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்ந்தெடுக்க, ராயல்ஸ் அணி பேட்டிங் களமிறங்கியது. முதல் விக்கெட்டை வேகமாக இழந்தாலும், அடுத்தடுத்து வந்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் சஞ்சு சாம்சன் ஒருபுறம் அதிரடி காட்ட, மறுபுறம் நிதானமாக ஆடினார் பட்லர்.

மேலும் படிக்க | ஐபிஎல் சுவாரஸ்யங்கள்: 4வது இடத்தில் இருக்கும் அணி கோப்பை வென்றது இல்லையா?

இறுதிக்கட்டத்தில் திடீரென விஸ்ரூபம் எடுத்த பட்லர் குஜராத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். ஒருகட்டத்தில் 38 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால், இறுதிக் ஓவர்களில் விளாசியல பட்லர் முடிவில் 56 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 188 ரன்கள் எடுத்தது. 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியும் தொடகத்திலேயே சஹாவை இழந்தது. மேத்யூ வேட் மற்றும் சுப்மான் கில் நிதானமாக ஆடி அடித்தளம் அமைக்க, பின்னர் வந்த பாண்டியா மற்றும் மில்லர் வாணவேடிக்கை காட்டினர்.

குறிப்பாக மில்லரின் ஆட்டத்தில் பொறி பறந்தது. முடிவில் குஜராத் அணி 19.3 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்தது. மில்லர் பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். கடைசி ஓவரில் மட்டும் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை விளாசி, ரசிகர்களை குஷிப்படுத்தியதுடன் அணியையும் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். இப்போட்டியில் வெற்றி பெற்ற பிறகு டிவிட்டர் பக்கம் வந்த மில்லர், தன்னுடைய முன்னாள் அணியான ராயல்ஸை கிண்டலாக கலாய்த்தார். அவருடைய டிவிட்டரில் "sorry ராயல்ஸ் பேம்லி’ என பதிவிட்டுள்ளார். மில்லர் 2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். மறுபுறம் உங்களின் முன்னாள் வீரர் உங்களுக்கு வேட்டையாடும்போது என்ன செய்ய முடியும் என ராயல்ஸ் ஏற்கனவே பதிவிட்ட டிவிட்டர் பதிவும் வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்க | ’என் கேரியர் 2007-ல் முடிந்திருக்கும்’ சேவாக் பகீர் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More