Home> Sports
Advertisement

கையில் சிலம்பம் சுற்றியபடி 17 கி.மீ ஓடி சிறுமி உலக சாதனை

கோவையில்   3 மணி நேரத்தில் தொடர்ந்து  17 கிலோ மீட்டர் கையில் சிலம்பம் சுற்றியபடி  ஓடி   சிலம்பம்  உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் 6 வயது சிறுமி.

 கையில் சிலம்பம் சுற்றியபடி 17 கி.மீ ஓடி சிறுமி உலக சாதனை


கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த அறிவரசன் சங்கீதா  தம்பதியின் 6 வயது மகள் கவிஸ்ரீ. அப்பகுதியில் உள்ள பள்ளியில்  படித்து வரும் இந்த சிறுமிக்கு சிலம்பம் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருந்ததால்,சிறு வயது முதல் முறைப்படி அருகில் உள்ள முல்லை தற்காப்பு கலை பயிற்சி கழகத்தில் சிலம்பம் கற்று வந்துள்ளார். இந்தநிலையில், சிலம்ப கலையில் சாதனை படைக்க  வேண்டும் என்ற எண்ணத்தில், சிறுமி கவிஸ்ரீ க்கு சிலம்பம் சுற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 

fallbacks

அதற்காக கடந்த சில நாட்களாக பயிற்சி மேற்கொண்ட சிறுமி கவிஸ்ரீ   அருகில் உள்ள மைதானத்தில், தனது கையில் சிலம்பம் சுற்றிக்கொண்டே 17 கிலோ மீட்டர்கள் தூரம் ஓடி சாதனை படைத்தார். மூன்று மணி நேரத்தில் செய்த சிறுமியின் இந்த சாதனையை இந்தியா உலக சாதனை புத்தகத்தின் நடுவர்கள் பிரகாஷ் ராஜ்  கண்காணித்தார்.

மேலும் படிக்க | தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

தொடர்ந்து 17 கிலோ மீட்டர் ஓடி சிலம்பம் சுற்றிய சிறுமியின்  சாதனையை இந்தியா உலக சாதனை புத்தகம் அங்கீகரித்து சிறுமிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தனர். இதனையடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

மேலும் படிக்க | அரசு மருத்துவமனையில் குடிபோதையில் இருந்த மருத்துவரால்  பரபரப்பு: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More