Home> Sports
Advertisement

யாருமே செய்யாத சாதனை... டி20 உலகக் கோப்பையில் வரலாறு படைத்த இந்தியா - என்ன மேட்டர்?

India National Cricket Team: இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய நிலையில், இதுவரை யாருமே செய்யாத பெரிய சாதனையையும் செய்திருக்கிறது.

யாருமே செய்யாத சாதனை... டி20 உலகக் கோப்பையில் வரலாறு படைத்த இந்தியா - என்ன மேட்டர்?

India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடர் கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி, ஜூன் 29ஆம் தேதியான நேற்று வரை அமோகமாக நடைபெற்றது. அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் இந்த தொடர் நடைபெற்ற நிலையில், போதிய கூட்டம் இல்லாததாலும், ஆடுகளம் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானதாலும் இந்த தொடர் மீது ஈர்ப்பு தொடக்க கட்டத்தில் மிக குறைவாக இருந்தது. 

இருப்பினும், சூப்பர் 8 சுற்றில் இருந்து சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட பெரிய அணிகள் குரூப் சுற்றோடு வெளியேறின. குரூப் சுற்றில் 20 அணிகள் மோதிய நிலையில், அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 4 பிரிவுகளிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. 

இந்திய அணியின் வெற்றிப் பயணம்

சூப்பர் 8 சுற்றில் தேர்வான 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் முதல் பிரிவிலும்; அமெரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இரண்டாவது பிரிவிலும் இடம்பெற்றன. இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஆஸ்திரேலியாவால் அரையிறுதிக்கு தகுதிபெற இயலவில்லை.

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பையை முத்தமிட்ட இந்தியா... உடனே தோனி போட்ட சர்ப்ரைஸ் பதிவு - ஆஹா!

அதன்மூலம் முதல் பிரிவில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும், இரண்டாவது பிரிவில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல்முறையாக ஐசிசி உலகக் கோப்பை தொடர்களின் அரையிறுதியில் வென்று, முதல்முறையாக பைனலுக்கும் சென்றது. 

17 ஆண்டுகளுக்கு பின்...

தொடர்ந்து, இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. அந்த வகையில், பார்படாஸில் உள்ள பிரிட்ஜ் டவுண் நகரின் கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா - இந்தியா அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 17 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. தொடர்ந்து, 11 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி கோப்பையை கைப்பற்றியிருக்கிறது. 

யாருமே செய்யாத சாதனை

இதன்மூலம் தொடர் முழுவதும் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல், டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. இந்திய அணி விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. குரூப் சுற்றில் கனடாவுக்கு எதிரான போட்டி மட்டும் மழையால் முழுமையாக ரத்தானது குறிப்பிடத்தக்கது. 

ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்தியா தொடர்ச்சியாக எட்டு போட்டிகளில் வென்றுள்ளது. ஆஸ்திரேலியா 2022 மற்றும் 2024 தொடர்களை சேர்த்து தொடர்ச்சியாக எட்டு ஆட்டங்களை வென்றது, அதே நேரத்தில் தென்னாப்பிரிக்காவின் நேற்றைய தோல்விக்கு முன் எட்டு போட்டிகளில் வென்றிருந்தது. 

மேலும் படிக்க | விராட் கோலி ஓய்வு அறிவிப்பு.... இனி இந்திய அணிக்காக ஆடமாட்டார்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More