Home> Sports
Advertisement

சாம் கரண் போனால் என்ன பென் ஸ்டோக்ஸை தட்டி தூக்கிய சிஎஸ்கே! தோனியின் மாஸ்டர் பிளான்

ஐபிஎல் மினி ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை தட்டி தூக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அவரை 16.25 கோடிக்கு சென்னை அணி வாங்கியிருக்கிறது.

சாம் கரண் போனால் என்ன பென் ஸ்டோக்ஸை தட்டி தூக்கிய சிஎஸ்கே! தோனியின் மாஸ்டர் பிளான்

ஐபிஎல் மினி ஏலம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் பரபரப்பாக நடைபெறுகிறது. இதில் சாம்கரண், பென் ஸ்டோக்ஸ், நிக்கோலஸ் பூரன், கேம்ரூன் கிரீன் உள்ளிட்ட வீரர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வரவேற்பு இருந்தது. சாம் கரண் ஏலத்தில் வந்ததும் அவரை மீண்டும் அணிக்கு கொண்டு வர சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகீரத முயற்சிகளை எடுத்தது. மும்பை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகள் தொடர்ச்சியாக அவரை ஏலத்தில் எடுக்க முட்டி மோதின. ஆனாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 கோடி வரைக்கும் சாம்கரணை எடுக்க முயற்சித்தது. 

மேலும் படிக்க | IPL Mini Auction 2023: சாம்கரண் காட்டில் பண மழை! ஐபில் வரலாற்றில் புது உச்சம்

ஆனால், பஞ்சாப் அணி சாம்கரணை எடுப்பதில் உறுதியாக நின்றுவிட்டது. ஏனென்றால் ஏற்கனவே சாம்கரண் பஞ்சாப் அணிக்காக விளையாடியிருக்கிறார். அங்கிருந்து ஏலத்தில் வந்தபோதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கச்சிதமாக தட்டித் தூக்கியது. இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணி விழித்துக் கொண்டது. அவரை ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத தொகையான 18.50 கோடிக்கு ஏலம் எடுத்தது. இது சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், பென்ஸ்டோக்ஸ் வந்ததும் கோதாவில் குதித்தது. அவரை விட்டுவிடவே கூடாது என்பதில் உறுதியாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மற்ற அணிகள் மோதியபோதும் விடாமல் ஏலத்தில் இருந்து கொண்டே இருந்தது. 

இறுதியாக 16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸை வசப்படுத்தியது. இதனால் மகிழ்ச்சியடைந்த பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற புகைப்படத்தை உடனடியாக பகிர்ந்தார். பென் ஸ்டோக்ஸைப் பொறுத்தவரை ஏற்கனவே அவர் தோனி தலைமையின் கீழ் விளையாடியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்டபோது அறிமுகமான பூனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோனி தலைமையில் களமிறங்கியது. அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடினார். அவரின் வருகையை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டி வருகின்றனர். 

மேலும் படிக்க | ஐபிஎல் ஏலத்தில் கிங் மேக்கர் இவர் தான்!... என்ன செய்யப்போகிறார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More