Home> Sports
Advertisement

இந்தியா 2018-ல் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் -பிசிசிஐ

இந்தியா 2018-ல் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் -பிசிசிஐ

இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா தென்னாப்பிரிக்காவுடன் மூன்று போட்டிகள் கொண்ட 'மகாத்மா காந்தி - நெல்சன் மண்டேலா' டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. மேலும் ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் சர்வதேச தொடரிலும், மூன்று டி 20 போட்டியிலும் விளையாடும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

 

Read More