Home> Sports
Advertisement

ஆசிய விளையாட்டுப் போட்டி 2018: வெண்கலப்பதக்கம் வென்று அசத்திய அங்கிதா ரெய்னா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா வெண்கலப்பதக்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி 2018: வெண்கலப்பதக்கம் வென்று அசத்திய அங்கிதா ரெய்னா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா வெண்கலப்பதக்கம் வென்றார்.

18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன.  இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் சுமார் 45 நாடுகள் பங்கேற்றுள்ளது. செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்பட 40 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை மொத்தம் 17 பதக்கங்களை வென்றுள்ளது. புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இன்று மட்டும் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது. துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் 15 வயதே ஆன இளம் வீரர் ஷர்துல் விஹான், 4வது வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். 

அதேபோல பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இவருக்கு இந்திய பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Read More