Home> Sports
Advertisement

Tokyo Olympics: மீராபாய் சானுவின் வெள்ளி பதக்கம், தங்கமாக மாறுமா?

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவுக்கான பளுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்ற சீன வீராங்கனை ஜிஹியு ஹூவுக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Tokyo Olympics: மீராபாய் சானுவின் வெள்ளி பதக்கம், தங்கமாக மாறுமா?

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவுக்கான பளுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்ற சீன வீராங்கனை ஜிஹியு ஹூவுக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

மீராபாய் சானு, ஸ்னாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் ஆகிய இரு பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். சீன வீராங்கனை ஹோ சி ஹூய் 210 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். இதில் இரண்டாவது இடத்தை மீராபாய் பெற்றார். 

ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற அவர், ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தால், அது அவருக்கு பாதகமாகும். ஆனால், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க சாதகமான வாய்ப்பாக மாறும்.

ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “ பளுதூக்குதலில் தங்கம் வென்ற சீன வீராங்கனை டோக்கியோவில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், மகளிருக்கான 49-கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற மீராபாய் சானு வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.  ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை மீராபாய் சானு தான்.  

சீன வீராங்கனை ஜிஹியு ஹூ 210 கிலோ எடை தூக்கி தங்கம் வென்று ஒலிம்பிக்கில் வரலாறு படைத்தார். தங்கப் பதக்கம் வென்ற ஜிஹியு ஹூவுக்கு ஊக்க மருந்துப் பரிசோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் தான், ஊக்கமருந்து பரிசோதனையில் சீன வீராங்கனை தோல்வி அடைந்தால்,  இந்திய வீராங்கனை சானுவுக்கு தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.  

Also Read | 49 கிலோ எடை மகளிர் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு. 

ஒலிம்பிக் போட்டியில் இதுபோன்று ஊக்கமருந்து பரிசோதனை தோராயமாக நடத்தப்படும். வென்றவர்களுக்கு ராண்டம் முறையில், ஏ சாம்பிள், பி சாம்பிள் என இருவிதமான பரிசோதனைகள் நடத்தப்படும். இதில் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்படும்.

உடல்வலி, தசைவலிக்காக பயன்படுத்தப்படும் வலிநிவாரண மருந்துகளில் சில தடைசெய்யப்பட்டள்ளன.  அவற்றை பயன்படுத்தியிருந்தாலும், ஒலிம்பிக் அமைப்பால் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டாலும் வென்றவர்களுக்கு தடை விதிக்கப்படுவதோடு, பதக்கமும் பறிக்கப்படும். 

வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய்க்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவர் தங்க மங்கையாக உயர்வார். சீன வீராங்கனை வெற்றி பெற்றால் அவரது தங்கப்பதக்கம் அவருக்கு உறுதியாகும்.

Also Read | வாள்வீச்சு போட்டியில் 2வது சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More