Home> Sports
Advertisement

இந்திய அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர்

ஐபிஎல் முடிந்திருக்கும் நிலையில் முக்கியமான வீரர் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். 

இந்திய அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர்

Ajinkya Rahane: ஐபிஎல் முடிந்திருக்கும் நிலையில், இந்திய அணியின் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் வரிசையாக வர உள்ளன. முதலாவதாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, அடுத்ததாக இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுடான போட்டிகளில் விளையாட இருக்கிறது. தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Ajinkya Rahane: அஸி.,யில் இந்திய அணியை வெளியேற சொன்ன அம்பயர்கள் - ரஹானே எடுத்த முடிவு

வரிசையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாட இருக்கும் சமயத்தில் பெரும் பின்னடைவாக இந்திய அணியின் முக்கிய வீரர் காயமடைந்துள்ளார். காயம் காரணமாக அவர், சுமார் 2 மாதங்கள் வரை ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் இந்திய அணியில் இடம்பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. அஜிங்கியா ரஹானே தான் காயமடைந்த அந்த முக்கிய வீரர். 

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் விளையாடினார். வெங்கடேஷ் ஐயருடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். ஆனால், அவருடைய பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஆரம்பம் முதலே சொதப்பினார். இதனால் சில போட்டிகளில் வெளியே உட்காரவைக்கப்பட்ட ரஹானே, தொடரின் பாதியில் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார். 

fallbacks

கொல்கத்தா அணி தனது 13 லீக் போட்டியில் விளையாடும்போது ரஹானே எதிர்பாராதவிதமாக காயமடைந்தார். உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சுமார் 8 வாரங்கள் வரை மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனால், பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அவர் சென்றுள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை மற்றும் பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறார். இதுகுறித்து ரஹானே பேசும்போது, 'காயத்தின் தன்மையைப் பொறுத்து 6 முதல் 8 வாரங்கள் வரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நான் நன்றாக குணமடைந்து வருகிறேன். உடல் தகுதியிலும் முழுக்கவனம் செலுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா அணிக்காக 7 போட்டிகளில் களமிறங்கிய அவர், 133 ரன்கள் மட்டுமே எடுத்தார். காயம் ஒரு காரணமாக இருந்தாலும், மோசமான ஃபார்ம் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்திய டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாடி வரும் அவர், மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்படுவாரா? என்ற சந்தேகமும் இருக்கிறது. புஜாரா இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்துவிட்டார். ஆனால் ரஹானே அப்படி  செய்யாமல் ஐபிஎல் விளையாடியது அவருக்கு பின்டைவாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க | IND vs SA: கே.எல்.ராகுல் - ஹர்திக் பாண்டியா இடையே பூசல் - காரணம் இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More