Home> Sports
Advertisement

3-வது டெஸ்ட்: இந்திய அணி முதலில் பேட்டிங்

3-வது டெஸ்ட்: இந்திய அணி முதலில் பேட்டிங்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. கிங்ஸ்டனில் நடந்த 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன் படி இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது.

இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புஜாரா நீக்கப்பட்டு ரோகித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், உமேஷ் யாதவ் மற்றும் அமித் மிஸ்ரா நீக்கப்பட்டு ரவீந்தர் ஜடேஜாவும், புவனேஷ்வர் குமாரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

Read More