Home> Sports
Advertisement

நியூசிலாந்துக்கு எதிரான 3rd T20I: படுதோல்வியை தழுவிய இந்தியா!

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா போராடி தோல்வி பெற்றது!

நியூசிலாந்துக்கு எதிரான 3rd T20I: படுதோல்வியை தழுவிய இந்தியா!

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா போராடி தோல்வி பெற்றது!

நியூசிலாந்து - இந்தியா மகளிர் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னதாக ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து 3 போட்டி கொண்ட டி20 தொடரில், வெலிங்டனில் நடந்த முதல் போட்டியிலும் ஆக்லாந்தில் நடந்த 2 வது போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷோபி டிவைன் 52 பந்துகளில் 72 ரன் எடுத்தார். கேப்டன் எமி சேட்டர்த்வெயிட் 23 பந்துகளில் 31 ரன் எடுத்தார். பின்னர் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி ஆட்டத்தைத் தொடங்கியது.

தொடக்க வீராங்கனை புனியா ஒரு ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க வீராங்கனை மந்தனா, பந்தை பல திசைகளிலும் விளாசித் தள்ளினார். அடுத்து வந்த ரோட்ரிகுயஸ் 21 ரன்னிலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 ரன்னிலும் வெளியேறினாலும் மந்தனா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர், 62 பந்துகளில் ஒரு சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 86 ரன் எடுத்திருந்தபோது டிவைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்திருந்தது. அடுத்து மிதாலி ராஜூடன் தீப்தி சர்மா இணைந்தார். இருவரும் தங்களின் நிதானமாக ஆட்டத்தை ஆடினர்.  

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ரன் தேவை என்ற நிலை. காஸ்பரெக் வீசிய முதல் பந்தை எதிர்கொண்ட மிதாலி ராஜ் பவுண்டரிக்கு அதை விரட்டினார். அடுத்து ஒரு ரன் எடுத்து மறுமுனை வந்தார். அடுத்தடுத்த பந்துகளில் தீப்தி சர்மா ஒரு பவுண்டரி, இரண்டு, ஒன்று என்று எடுக்க கடைசி பந்தில் வெற்றி பெற 4 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த பந்தை எதிர்கொண்ட மிதாலி ராஜால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து இந்திய மகளிர் அணி தோல்வியை தழுவியது. மிதாலி ராஜ் 24 ரன்களும் தீப்தி சர்மா 21 ரன்களும் எடுத்தனர். 

 

Read More