Home> Spiritual
Advertisement

ஜனவரி மாதத்தின் முதல் பெயர்ச்சிக்கு பிறகு வரும் வார ராசிபலன்கள்

Weekly Horoscope For 6 Zodacs January 2 - 8: எதிர்வரும் வாரத்திற்கான ஜோதிட பலன்கள் இவை. துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மீனம் என 6 ராசிக்காரர்களுக்கான ராசிபலன்களை தெரிந்துக் கொள்வோம் 

ஜனவரி மாதத்தின் முதல் பெயர்ச்சிக்கு பிறகு வரும் வார ராசிபலன்கள்

வார ராசிபலன்: எதிர்வரும் வாரத்திற்கான ஜோதிட பலன்கள் இவை. புத்தாண்டின் முதல் வாரத்தில், ஜனவரி 2 முதல் எட்டாம் தேதி வரையிலான ராசிபலன்களை தெரிந்துக் கொள்வோம். 2023ம் ஆண்டின் முதல் வாரத்தில், ராசிகள் சொல்லும் முன்னெச்சரிக்கை என்ன? இந்த வார ராசிபலன்கள் யாருக்கு எப்படி இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நவகிரகங்கள் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள்ளன. ஒரு கிரகம் புத்திசாலித்தனத்தின் காரணி என்றால், மற்றொன்று கர்மத்தை கணக்குப் பார்த்து பலன் தரும்கிரகம், ஒருவர் குருவாய் இருந்து செயல்படுத்துபவர் என்றால், மற்றொரு கிரக அதிபதி, மனோ காரகர்.

ஜாதகத்தில் புதனின் நிலை சிறப்பாக இருந்தால், அவர் வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை எடுத்து சரியான வேலைகளைச் செய்வார் என்றால், திருமணம் நடக்க குரு அருள் வேண்டும். எந்த ராசியில் எந்த கிரகம் அமர்கிறது என்பதைப் பொறுத்தும் பலன்கள் மாறும். நாளை ஜனவரி 2ம் தேதி புதன் அஸ்தமனம் ஆக உள்ள நிலையில், நாளை முதல் ஒரு வாரத்திற்கு ராசிகளுக்கான பலன்களை தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | Mercury Transit: புதன் பெயர்ச்சி பத்ர யோகத்தால் திளைக்கும் கிரகங்கள்

துலாம்: பேச்சில் கடுமை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் நிதானமாக இருங்கள். ஆடை அணிகலன்கள் மீதான நாட்டம் அதிகரிக்கும். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் அதனைத் தவிருங்கள், உத்தியோகஸ்தர்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் இருந்தாலும் தன்னடக்கத்துடன் செயல்படுவது அவசியம்.சோம்பல் அதிகமாக இருக்கும், குடும்பத்தில், வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணியிடத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உண்டு. 

தனுசு: தனுசு ராசிக்கு பொறுமை குறையும், பேச்சின் தாக்கம் அதிகரிக்கும், இனிப்பான உணவின் மீதான நாட்டம் அதிகரிக்கும். சொத்துக்களால் வருமானம் அதிகரிக்கும், வேலை மாற்றம் சாத்தியமாகும்.

மேலும் படிக்க | ஜனவரியில் நடக்க உள்ள 4 முக்கிய பெயர்ச்சிகள், இந்த ராசிகளுக்கு சிக்கல்

மகரம்: படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆனால், தன்னம்பிக்கை குறையலாம். சொத்து பராமரிப்புக்கான செலவுகள் கூடும்.வாழ்க்கைத் துணைக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம், மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு, வேறு இடத்திற்கு மாற வேண்டி வரும்..

கும்பம்: தன்னம்பிக்கை குறையும், ஆனால் குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.  விருப்பத்திற்கு மாறாக வேலைஅதிகரிப்பு சாத்தியமாகும்.பேச்சில் பொறுமையாக இருங்கள், செலவுகள் அதிகரிக்கும்.

மீனம்பணவரவு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. மனதில் மகிழ்ச்சியான உணர்வுகள் இருக்கும், ஆனாலும் தன்னடக்கத்துடன் இருங்கள்.அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும், தாயுடன் கருத்தியல் வேறுபாடுகள் இருக்கலாம். வேறு இடத்துக்குச் செல்ல நேரிடலாம், வருமானம் அதிகரிக்கும்  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | இந்த வார கிரகப் பெயர்ச்சியில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசி எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More