Home> Spiritual
Advertisement

சனி ஜெயந்தியில் உருவாகும் சுப யோகங்கள்: இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட மகிழ்ச்சி

Shani Jayanti 2023: இந்த ஆண்டு சனி ஜெயந்தி 3 ராசிகளை சேர்ந்தவர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் சனி பகவானால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

சனி ஜெயந்தியில் உருவாகும் சுப யோகங்கள்: இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட மகிழ்ச்சி

இந்த ஆண்டு சனி ஜெயந்தி மே 19 வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகின்றது. இந்த நாள் ஜ்யேஷ்ட அமாவாசை, இந்த நாளில்தான் கர்ம வினைகளின் கிரகமான சனி பகவான் தோன்றினார். இந்த ஆண்டு சனி ஜெயந்தி அன்று கஜகேசரி, ஷஷ், ஷோபன் ஆகிய 3 யோகங்கள் உருவாகின்றன. சனி ஜெயந்தி நாளில், சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் அமர்ந்திருப்பார். சனி பகவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கும் கிரகமாவார். 

இந்த ஆண்டு சனி ஜெயந்தி 3 ராசிகளை சேர்ந்தவர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் சனி பகவானால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். இதன் காரணமாக அவர்களது செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி போன்றவை அதிகரிக்கும். இது தவிர, புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. 

பொதுவாக சனி ஜெயந்தி அன்று அனைத்து ராசிகளிலும் சனி பகவானின் தாக்கம் இருக்கும். எனினும், இந்த ஆண்டு குறிப்பிட்ட சில ராசிகள் மீது சனி பகவானின் அதிகப்படியான அருள் இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

சனி ஜெயந்தியால் நல்ல பலன்களை பெறவுள்ள 3 ராசிக்காரர்களை பற்றி இங்கே காணலாம்: 

மேஷ ராசி: 

சனி ஜெயந்தி அன்று உருவாகும் கஜகேசரி யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல வகையான முன்னேற்றங்களை அள்ளித் தரும். இந்த நாளில் மேஷ ராசியில் சந்திரனும் வியாழனும் இணைவதால் கஜகேசரி யோகம் உருவாகும். இத்தகைய சூழ்நிலையில் மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யலாம். எதை செய்தாலும் சனி பகவானின் அருளால் வெற்றி கிடைக்கும். முன்னர் கிடைக்காத பல விஷயங்களில் இப்போது வெற்றி வாகை சூடுவீர்கள். 

சனி பகவானின் ஆசீர்வாதம் மேஷ ராசிக்காரர்கள் மீது இருக்கும். இதனால் கடன் பிரச்னை தீரும். குடும்பத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும் மற்றும் கூடுதல் வருமானத்திற்காக முயற்சிப்பீர்கள். அந்த முயற்சியில் நீங்கள் வெற்றியும் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் இப்போது உருவாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

மிதுன ராசி: 

சனி ஜெயந்தி மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்திற்கு சாதகமாக இருக்கும். உங்களின் பதவி, புகழ் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் பெரிய பதவி அல்லது புதிய பொறுப்பைப் பெறலாம். இது உங்கள் வாழ்க்கையை மேலும் மேம்படுத்தக்கூடும். நீங்கள் வேலை செய்யும் விதமும் அதனால் உங்களுக்கு கிடைக்கும் முடிவுகளும் அனைவராலும் பாராட்டப்படும். 

மேலும் படிக்க | ரிஷப ராசியில் நுழையும் சூரியன்! இந்த 5 ராசிகளுக்கு ஆபத்து!

தற்போதைய வேலையில் திருப்தி அடையாமல் புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். சனிபகவானின் ஆசீர்வாதத்தால் அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். ரியல் எஸ்டேட் விஷயத்தில் உங்களுக்கு சாதகமாக முடிவுகள் வரலாம். செயல்களில் வெற்றி உண்டாகும்.

துலா ராசி: 

துலா ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் அருள் எப்போதும் கிடைக்கும். இந்த ஆண்டு, சனி ஜெயந்தி அன்று உங்கள் செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு, புகழ் போன்றவை உயரும் வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் வெற்றி பெற சனி பகவானை முறையாக வழிபட வேண்டும். அனைத்து நாட்களிலும் முடியாவிட்டாலும், கண்டிப்பாக சனிக்கிழமையன்று சனிபகவானை வழிபடுங்கள்.

சனி ஜெயந்தி அன்று, நீங்கள் வேலை அல்லது வியாபாரத்தில் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். சனியின் அருளால் உங்கள் தொழில் முன்னேற்றம் அடையும். உங்களின் சௌகரியங்களுக்கும் வசதிகளுக்கும் குறைவிருக்காது.

சனி ஜெயந்தி 2023: திதி முஹூர்த்தம்

பஞ்சாங்க குறிப்புகளின் படி, சனி ஜெயந்தியின் ஜ்யேஷ்ட அமாவாசை திதி, மே 18 அன்று இரவு 09:42 மணிக்கு தொடங்கி மே 19 அன்று இரவு 09:22 மணிக்கு முடிவடையும். இத்தகைய சூழ்நிலையில், மே 19 வெள்ளிக்கிழமை சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க | 16 நாட்களுக்கு பிறகு 4 ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, பணம் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More