Home> Spiritual
Advertisement

அழகுக்கு மட்டுமா சுக்கிரன் பொறுப்பு? பணத்தையும் கொடுத்து பிரபலமாக்கும் சுக்கிரனின் பெயர்ச்சி பலன்கள்!

Venus Transit Sept 2024 : சுக்கிரன் வலுவான நிலையில் இருந்தால், வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும்... சுக்கிரனின் செப்டம்பர் மாதப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும்?

அழகுக்கு மட்டுமா சுக்கிரன் பொறுப்பு? பணத்தையும் கொடுத்து பிரபலமாக்கும் சுக்கிரனின் பெயர்ச்சி பலன்கள்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் ஒவ்வொரு இயக்கமும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துபவை. செப்டம்பர் 18ம் தேதி சுக்கிரன் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகவிருக்கிறார். துலாம் ராசியில் சஞ்சரிக்கவிருக்கும் சுக்கிரனின் தாக்கம் அனைவரின் வாழ்விலும் ஏற்படும் என்றாலும், சிலருக்கு சாதகமாகவும் பலருக்கு பாதகமாகவும் இருக்கிறது.

எது எப்படி இருந்தாலும், ஒரு கிரகத்தின் தாக்கம் மட்டும் ஒரு ஜாதகரை ஒன்றும் செய்துவிட முடியாது. அவரவர் ஜெனன ஜாதகத்தின் அடிப்படையில் ஒன்பது கிரகங்களின் இயக்கமும், அவற்றின் கலவையும் சேர்ந்தே நன்மை அல்லது தீமையை செய்யும். ஒரு கிரகத்தின் பெயர்ச்சியைப் பற்றி சொல்லி, அது மிகவும் தீமையைத் தரும் என்று சொல்வது எல்லாம் பொதுவான பலன்களாகவே இருக்கும்.

பொதுவாகவே, ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவான நிலையில் இருந்தால், மனதில் நிம்மதி மற்றும் தெளிவு, ஆரோக்கியம் மனவலிமை அதிகமாக இருக்கும். வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கும் சுக்கிரனின் செப்டம்பர் மாதப் பெயர்ச்சி பலன்களைத் தெரிந்துக் கொள்வோம்.

இது பொதுவான பெயர்ச்சி பலன்கள் தான். ஜாதகத்திற்கு ஏற்றாற்போல மாறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | போதாத காலம் வரப்போகுது எச்சரிக்கை! சூரியன் பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு மோசம்!

சுக்கிரனின் செப்டம்பர் மாதப் பெயர்ச்சி எந்த ராசிக்கு எப்படி இருக்கும்?

துலாம் ராசியில் சுக்கிரன் சஞ்சாரம்

ராகு, கேது மற்றும் செவ்வாய் போன்ற அசுப கிரகங்களுடன் சேர்க்கை இல்லாமல் இருப்பதால், துலாமில் சுக்கிரன் நல்ல பலனையே கொடுப்பார். அதிலும் துலாம் ராசிக்காரர்களில் வணிகம், வர்த்தகம், நிதித்துறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சுக்கிரனின் ஆசி அற்புதமான பலன்களைத் தருவதாக இருக்கும். வழக்கத்தைவிட சுக்கிரனின் சாதகமான பலன்கள் இந்த முறை இரட்டிப்பாக இருக்கும்.

சுக்கிரன் பெயர்ச்சியால் ரிஷபத்திற்கு அருமை

ரிஷப ராசியினருக்கு, மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் சுக்கிரன் குடும்பத்தில் சுப செலவுகளை ஏற்படுத்துவார். சுப செலவுகள் என்பதால் கவலை இல்லாமல் செய்யலாம்.  

சுக்கிரன் பெயர்ச்சியால் சிம்மத்திற்கு அட்டகாசம்  

துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்வதால் சிம்ம ராசிக்காரர்களின் மனதில் உள்ள விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வேதாந்தி போல பேசிக் கொண்டிருந்த சிம்ம ராசியினர், தற்போது தங்கள் ஆசைகளை வெளிப்படையாக சொல்லி நிறைவேற்றிக் கொள்ளும் உத்வேகத்தை சுக்கிரன் கொடுப்பார்.

மேலும் படிக்க |  ஆவணியை முடித்து வைத்து புராட்டாசியை வரவேற்கும் வார ராசிபலன்கள்! அதிர்ஷ்டம் யாருக்கு எப்படி?

சுக்கிரன் பெயர்ச்சியால் கன்னிக்கு அருமை

சுக்கிரன் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாவதால் கன்னி ராசியினரின் தொழில் செழிப்பாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம், மனதில் மகிழ்ச்சி, தடைகள் அகல்வதால் ஏற்படும் நிம்மதி என ஆசுவாசமான வாழ்க்கைக்கு கன்னி ராசியினர் திரும்புவார்கள்.

சுக்கிரன் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்கு அருமை

விருச்சிக ராசிக்கு சுக்கிரனின் துலாம் ராசி சஞ்சாரம் நல்ல காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். மனக்கவலைகள் அகன்று, நிம்மதியாக வாழ வழி செய்யும் சுக்கிரன் பெயர்ச்சி, விருச்சிக ராசியினரின் புகழை அதிகரிக்கும்.

சுக்கிரன் பெயர்ச்சியால் மகரத்திற்கு அற்புதம் 

அருமையாக வாழலாம் என்ற நம்பிக்கையை சுக்கிரனின் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். பிரபலங்களின் சந்திப்பு, பொதுநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வது என வாழ்க்கை வசந்தமாகும்.

சுக்கிரன் பெயர்ச்சியால் மீன ராசியினருக்கு அருமை

துலாமில் சுக்கிரன் வருவதால் மீன ராசி பெண்களின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த நல்ல காலம் வந்துவிட்டது மீன ராசியினரே. இனி திரும்பிப் பார்க்கவே தேவையில்லை என்ற அளவுக்கு மகிழ்ச்சி உங்களை வந்தடையும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இந்த ஆண்டு பிள்ளையார் சுழி போட்டு விநாயகர் சதுர்த்தி விசர்ஜன் செய்யும் நேரம் எப்போது? கணபதியை கரைப்போம்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More