Home> Spiritual
Advertisement

சுக்கிரன் அருளால்... ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையும் ‘சில’ ராசிகள்..!!

Venus Transit: சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக ஆகஸ்ட் மாதத்தில், சிம்மம் உட்பட 5 ராசிக்காரர்கள் செல்வமும், ஆடம்பரமும் பெருகி ராஜ வாழ்க்கை வாழ்வார்கள். 

சுக்கிரன் அருளால்... ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையும் ‘சில’ ராசிகள்..!!

Venus Transit: சுக்கிரன், ஜூலை மாத இறுதியில் சிம்ம ராசியில் நுழைந்து புதனுடன் இணைய இருப்பதால் லக்ஷ்மி நாராயண் ராஜயோகம் உருவாகும். மேலும் ஆகஸ்ட் மாத மத்தியில் சூரியனும் சிம்ம ராசிக்கு வருவதால் உருவகும் சுக்ராதித்ய ராஜயோகம் பலன் தரும். இந்நிலையில், சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக ஆகஸ்ட் மாதத்தில், சிம்மம் உட்பட 5 ராசிக்காரர்கள் ரா அதிக அளவில் பணம் சம்பாதிப்பார்கள். லக்ஷ்மி நாராயணர் ராஜயோகத்தின் பலன் காரணமாக இந்த ராசிக்காரர்களுக்கு செல்வமும், ஆடம்பரமும் பெருகி ராஜ வாழ்க்கை வாழ்வார்கள். சுக்கிரனின் சஞ்சாரத்தால் பலன் தரும் ராசிகளில் உங்கள் ராசியும் உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை முழுமையாக படிக்கவும்.

மேஷ ராசி: சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

மேஷ ராயினருக்கும் சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். வேலை, தொழில் மற்றும் நிதி விஷயங்களில் தீட்டி திட்டம் அனைத்தும் வெற்றி பெறும். பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்ய ஏற்ற நேரம். இதனால், எதிர்காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும் .உங்கள் மனைவியுடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள். தம்பதியினரிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும், வாழ்க்கை அமைதியாக இருக்கும்.

ரிஷபம் ராசி: சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன் என்பதால், சுக்கிரனின் சஞ்சாரம் வேலையில், தொழிலில் பெரும் லாபத்தை அளிக்கும். ஆடம்பரத்திற்காக அதிகம் செலவிடுவீர்கள். நல்ல வருமானம் காரணமாக நிதி நிலைமை மேம்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் குடும்பத்தில் சூழ்நிலை மிகவும் சுமுகமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய வேலை வாய்ப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் அன்பும் அக்கறையும் நிறைந்து இருக்கும்.

மிதுன ராசி: சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

மிதுன ராசிக்கள் சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக உத்தியோகத்தில் பெரும் முன்னேற்றம் காண்பீர்கள். ஆரம்ப முதலீடு ஆகஸ்ட் மாதத்தில் பெரிய வருவாயைக் கொண்டுவரும். ஒன்றுக்கு மேற்பட்ட வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம், பெரிய அளவில் பணம் சம்பாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். நிதி விஷயங்களில் நீங்கள் முன்பை விட அதிக தன்னம்பிக்கை உடையவராக இருப்பீர்கள். எனினும் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். 

துலாம் ராசி: சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

துலாம் ராசிக்காரர்களின் ராசி அதிபதியாக சுக்கிரன் உள்ளதால், சுக்கிர பெயர்ச்சியினால் ஏற்படும் சுப பலன்களால், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். உலக வாழ்க்கை பற்றிய புரிதல் மேம்படும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள் உங்கள் ஆரோக்கியமும் முன்பை விட சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி நிலவும்.

கும்ப ராசி: சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் காரணமாக வாழ்க்கையில் ஆடம்பரங்கள் பெருகும். உங்கள் திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். வெளி உணவுகளை தவிர்க்கவும்.  நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கலாம். வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கும். இறை சார்ந்த நம்பிக்கை மனதில் மேம்படும் தொழிலில் நல்ல வருமானம் கிடைப்பதுடன் வாழ்வில் பொருள் வசதிகளும் பெருகும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்தால்? பாவம் கர்மத்தை தொலைக்க பிறந்தவர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More