Home> Spiritual
Advertisement

புதன் சுக்கிரன் சேர்க்கை: லக்ஷ்மி நாராயண யோகத்தால் பண மூட்டை மூட்டைய கொட்டும்

வேத ஜோதிடத்தின் படி, சிம்மத்தில் புதன் சுக்கிரனின் சேர்க்கையால் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.

புதன் சுக்கிரன் சேர்க்கை: லக்ஷ்மி நாராயண யோகத்தால் பண மூட்டை மூட்டைய கொட்டும்

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றும் பொழுது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் இடமாற்றம் அவ்வப்போது சில மங்களகரமான யோகங்களை உருவாகும். அப்படி உருவாகக்கூடிய யோகங்கள் அனைவரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். 

அந்த வகையில் சிம்மத்தில் புதனும் சுக்கிரனும் சேர்க்கையால் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த நிகழ்வானது கடந்த ஜூலை 19 ஆம் தேதியில் நடைபெற்றது. அப்போது புதன் சிம்ம ராசியிலும், ஜூலை 31 ஆம் தேதி சுக்கிரனும் இணைந்து இந்த அபூர்வ யோகத்தை உருவாக்கியது. இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைக் அள்ளித் தரும். இந்நிலையில் புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், பண மழை போன்றவற்றை தரும் என்பதை தெரிந்துக்கொள்வோம். 

மேலும் படிக்க | Prayers For New Home Buyers: கனவு இல்லம் நனவாக வழிபட வேண்டிய முறைகள்! எந்த ராசிக்கு என்ன கிரகத்தை வழிபடுவது?

மேஷம் (Aries Zodiac Sign) - புதன் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகியிருக்கும் லக்ஷ்மி நாராயண யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய வீடு அல்லது சொத்து வாங்கும் வாய்ப்பை தரும். அன்னை லட்சுமி தேவியின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். புதிய வேலையைத் தொடங்க இதுவே சாதகமான நேரம். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம் (Taurus Zodiac Sign) - புதன் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகியிருக்கும் லக்ஷ்மி நாராயண யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு முதலீடு மூலம் நல்ல லாபத்தை தரும். இந்த நேரத்தில் நிதி ஆதாயம் உண்டாகும். ஆனால் சில சுப செலவுகளும் ஏற்படலாம். அன்னை லட்சுமி தேவியிடம் சிறப்பு ஆசிகளைப் பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க இதுவே உகந்த நேரம்.

மிதுனம் (Gemini Zodiac Sign) - புதன் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகியிருக்கும் லக்ஷ்மி நாராயண யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருளை அள்ளித் தரும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். நிதி ஆதாயம் உண்டாகும், ஆனால் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். கொடுக்கல் வாங்கல்களில் சாதகமாக முடிவுகளை பெறுவீர்கள். 

கன்னி (Virgo Zodiac Sign) - புதன் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகியிருக்கும் லக்ஷ்மி நாராயண யோகம் கன்னி ராசிக்காரர்களின் நிதி நிலையை மேம்படுத்தும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். அன்னை லட்சுமியின் அருளால் வாழ்க்கையில் இன்பங்கள் பெருகும். செலவுகள் குறையும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இன்னும் 2 நாட்களில் சுக்கிரன் உச்ச பெயர்ச்சி: பணம், பொற்காலம், ராஜராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More